ரதன தேரர் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்; பாராளுமன்ற உறுப்புரிமையை நீக்கவும் கோரிக்கை
அபே ஜனபல கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரதன தேரர் கட்சி அங்கத்துவத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
இவருக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்த
6 குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதால் கட்சியின் மத்தியக்குழு கட்சியின் அரசியல் குழு ஆகியன இத்தீர்மானத்தை ஏகமனதாக மேற்கொண்டுள்ளன.
அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்தும் இவரை நீக்குமாறு கட்சியின் செயற்குழு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்கியுள்ள குற்றப் பத்திரிகையில் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
No comments