Breaking News

குவைத் நாட்டிலிருந்து அல்குர்ஆனை மனனம் செய்து முடித்த இலங்கை மாணவன் அஹ்மத் பஸ்ஹான்.

புத்தளம் மாவட்டம் மதுரங்குளி -  கனமூலையைச் சேர்ந்த அஷ்ஷெய்க் Z.A.M.சியாம் (ஹாசிமி) அவர்களின் செல்வப் புதல்வர் அஹ்மத் பஸ்ஹான் 6/10/2021 புதன் கிழமை புனித அல் குர்ஆனை சிறு பிராயத்தில் முழுமையாக மனனம் செய்து முடித்துள்ளார். 


இவர் குவைத் நாட்டில் வசித்து வரும் அதேவேளை அந்நாட்டின் ஆங்கில மொழி பாடசாலை சென்று கொண்டிருக்கும் நிலையில் பகுதி நேர அல் குர்ஆன் மத்ரஸா சென்று தனது 10ஆவது வயதில் அல் குர்ஆனை மனனம் செய்ய ஆரம்பித்தார்.

தன்னுடைய 14ஆவது வயதில் தரம் 8 ஆம் ஆண்டில் கல்வி கற்றுக்கொண்டிருக்கும் நிலையில் அல் குர்ஆனை மனனம் செய்து முடித்துள்ளார். அல்ஹம்து லில்லாஹ்


அஹ்மத் பஸ்ஹான் ஏற்கனவே குவைத் நாட்டில் இடம்பெற்ற அல்குர்ஆன் மனனப் போட்டியில்  45 நாட்டு மாணவர்களுடன் போட்டியிட்டு  முதலாமிடம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்   கடந்த இரண்டு மாதங்களாக இலங்கையில் வசித்துவரும் அதேவேளையில் Online வகுப்பில் பங்குபற்றி அல் குர்ஆன் மனனத்தை நிறைவு செய்துள்ளார்.


எனவே மாணவன்  அல் - ஹாபிழ் அஹ்மத் பஸ்ஹான் கனமூலை மண்ணுக்கு பெருமை சேர்த்து கொடுத்துள்ளார் அவரின் கல்விக்காக எல்லோரும் பிராத்திப்போம்.








No comments

note