ஆசிரியர்கள் மீது கை வைத்தால் விபரீதங்களை சுமக்க வேண்டி வரும்
அதிபர் ஆசிரியர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் பலரும் எச்சரிக்கைகளை விடுத்து வருகின்றனர்.
உரிமைக்காக சாத்வீகமாக அமைதியாக போராடும் ஆசிரியர்கள் மீது எவரேனும் கை வைத்தால் அதன் விபரீதங்களை உரியவர்கள் அனுபவிக்க வேண்டிவரும்
என ஆசிரியர் சேவா சங்கத்தின் பொதுச் செயலாளர் மகிந்த ஜயசிங்க தெரிவிக்கிறார்.
ஆசிரியர்கள் மீது அடாவடித்தனங்கள் அநியாயங்கள் கட்டவிழ்த்து விடப்படும் பட்சத்தில் எமது நடவடிக்கைகளை மேலும் மேலும் தீவிரப்படுத்துவோம் எனவும் அவர் தெரிவித்தார்.
No comments