தேசிய ஒளடத கூட்டுத்தாபன மோசடி கணிணி தகவல் அழிப்பு விவகாரம்: விசாரணைக்குழு தொடர்பில் சந்தேகம் சுயாதீன குழு அமைக்க கோரிக்கை
தேசிய ஒளடதக் கூட்டுத்தாபனத்தில் ஏற்பட்டுள்ள மோசடி நடவடிக்கைகள் மற்றும் இவை தொடர்பான தகவல் தொகுதி அழிப்பு விடயங்களை விசாரணை செய்ய அமைக்கப்பட்டுள்ளகுழு தொடர்பில் சந்தேகம் நிலவுவதாக அரச வைத்திய சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
இக்குழுவை மோசடி தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சுகாதார இராஜாங்க அமைச்சு ஒருதலைப்பட்சமாக நியமித்துள்ளதுடன் இக்குழுவின் நடவடிக்கைகள் திருப்தியாக இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே ஜனாதிபதி தலைமையில் சுயாதீன விசாரணைக் குழு ஒன்று அமைக்குமாறு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
No comments