Breaking News

டொக்டர் ஜெமீல் எழுதிய "தடங்களின் நினைவுகள்" நூல் வெளியீடு

(அஸ்லம் எஸ்.மௌலானா)

சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் முன்னாள் தலைவரும் சாய்ந்தமருது வைத்தியசாலையின் முன்னாள் பொறுப்பு வைத்திய அதிகாரியுமான டொக்டர் எம்.ஐ.எம்.ஜெமீல் எழுதிய "தடங்களின் நினைவுகள்" சுயசரிதை நூலின் முதலாம் கட்ட வெளியீடு நேற்று முன்தினம் அவரது இல்லத்தில் நடைபெற்றது.


சாய்ந்தமருது சிரேஷ்ட பிரஜைகள் சபையின் ஏற்பாட்டில் அதன் செயலாளரும் ஓய்வுபெற்ற கோட்டக் கல்விப் பணிப்பாளருமான எம்.ஐ.அப்துல் ஜப்பார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஓய்வுபெற்ற கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.பீர்முஹம்மட், நூல் அறிமுகவுரையையும் உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா, நூல் விமர்சன உரையையும் நிகழ்த்தினர். வர்த்தகப் பிரமுகர் முஹம்மட் நஸீர் ஹாஜியார், நூலின் முதற் பிரதியை பெற்றுக் கொண்டார்.


இதன்போது சாய்ந்தமருது வைத்தியசாலையின் ஓய்வுபெற்ற வைத்திய அதிகாரி டொக்டர் எஸ்.ஏ.ஆர்.எம்.மௌலானா, நூலாசிரியர் டொக்டர் எம்.ஐ.எம்.ஜெமீல் அவர்களின் வைத்திய மற்றும் கல்வி, கலாசார, சமூக சேவைகளையும் சமாதான, இன ஐக்கிய, சிவில் செயற்பாடுகளையும் பாராட்டி பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார்.


அத்துடன் நூலாசிரியர் டொக்டர் எம்.ஐ.எம்.ஜெமீல் ஏற்புரையையும் இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலய அதிபர் ஏ.ஜீ.எம்.ரிஷாத் நன்றியுரையையும் நிகழ்த்தினர்.


இந்நிகழ்வில் கல்வியியலாளர்கள், உலமாக்கள் மற்றும் பிரமுகர்கள் பலர் கொண்டு சிறப்புப் பிரதிகளை பெற்றுக் கொண்டனர்.











No comments

note