சம்மாந்துறையில் ஆசிரியர்கள், அதிபர்கள் எதிர்ப்பு ஆரப்பாட்டம் !!
(நூருள் ஹுதா உமர், ஐ.எல்.எம். நாஸிம்)
சர்வதேச ஆசிரியர் தினமான ஆசிரியர்கள், அதிபர்கள் சம்மாந்துறை வலயக்கல்வி முன்றலில் எதிர்ப்பு
ஆர்ப்பாட்ட மொன்றை இன்று(06) காலை முன்னெடுத்தனர்.
நாட்டில் சர்வதேச ஆசிரியர் தினம் கொண்டாப்படும் நிலையில் இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் உட்பட ஆசிரியர், அதிபர்கள் சம்மாந்துறை வலய கல்வி அலுவலகத்தின் முன்னால் தமது நீண்டகால கோரிக்கைக்கு தீர்வை பெற்றுத் தருமாறு பாதாகைகளை எந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆசிரியர் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாட்டு பிரச்சினை மற்றும் நாட்டிலுள்ள மாணவர்களின் கல்வி உரிமையை பாதுகாத்தல் ஆகிய இரண்டு விடயங்களை முன்னிலைப்படுத்தி நாடளாவிய ரீதியில் எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட நிலையில் இதற்கு ஆதரவாக குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
No comments