நிரூபமா ராஜபக்ஷவுக்கு அழைப்பாணை
வரி செலுத்தாமை பண மோசடி சொத்து விபரங்கள் அறிவிக்காமை குறித்து குற்றச்சாட்டு
முன்னாள் அமைச்சர் நிரூபமா ராஜபக்ஷ அவரது கணவர் திருக்குமரன் நடேசன் ஆகியோருக்கு எதிராக Pandora Paper மூலம் அம்பலமான நிதி மோசடி குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் 1994 முதல் 2005 ஆம் ஆண்டுவரை பாராளுமன்ற உறுப்பினர் ஆகவும் அமைச்சராகவும் கடமையாற்றிய நிரூபமா ராஜபக்ஷ நிதி மோசடி சொத்து விபரங்கள் அறிவிக்காமை வரி செலுத்தாமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஊழல் மோசடிப் பிரிவுக் கிடைக்கப் பெற்றுள்ள முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
விசாரணைகளில் முதற்கட்டமாக திருக்குமரன் நடேசன் வாக்குமூலம் அளித்துள்ளதுடன் தற்போது வெளிநாட்டில் உள்ள நிரூபமா ராஜபக்ஷவுக்கு ஊழல் மோசடி பிரிவு வருமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
No comments