Breaking News

சம்மாந்துறை நீதிமன்ற வளாகத்தில் புதிய கட்டித்தொகுதிக்கான அடிக்கல் நடுவிழா !

மாளிகைக்காடு நிருபர் 

சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் புதிய அலுவலக கட்டித்தொகுதிக்கான அடிக்கல் நடுவிழா நாளை (11) காலை சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்க தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி வை.எம். அன்வர் ஸியாத் தலைமையில் நீதிமன்ற வளாகத்தில் இடம்பெறவுள்ளது. 


சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி ஐ.என். றிஸ்வானின் அழைப்பின் பேரில் கல்முனை உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீநிதி நந்தசேகரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு இந்த கட்டித்திற்கான அடிக்கல்லை உத்தியோகபூர்வமாக நட்டு ஆரம்பித்து வைக்கவுள்ளார். நீதியமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் அமையவுள்ள இந்த புதிய அலுவலக கட்டித்தொகுதியில் சட்ட உதவி ஆணைக்குழுவின் காரியாலயம், சிறுவர் நன்னடத்தை திணைக்கள காரியாலயம், சட்டத்தரணிகள் ஆலோசனை அறை, சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற நிர்வாக அலுவலகம், சிற்றுண்டி சாலை என்பன அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது.




No comments

note