ஜனாதிபதி கோத்தாபயவின் சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் கீழ் கல்முனையில் வீதிகளை காபட் வீதிகளாக செப்பனிடும் திட்டம் !
மாளிகைக்காடு நிருபர்- நூருல் ஹுதா உமர்
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் கீழ் நாடுபூராகவும் ஒரு லட்சம் கிலோ மீட்டர் வீதிகளை காபட் வீதிகளாக செப்பனிடும் திட்டத்தின் கீழ் கல்முனை பற்றிமா கல்லூரி மைதான வீதி செப்பனிடும் வேலைத்திட்டத்தின் ஆரம்ப கட்ட பணிகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
தேசிய காங்கிரஸின் கல்முனை அமைப்பாளர் றிசாத் ஷெரீப் ,தேசிய காங்கிரசின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லாவிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாஉல்லாவின் சிபாரிசின் பேரில் இந்த வேலைத்திட்டம் நடைபெறவுள்ளது. இது தொடர்பிலான களவிஜயமும், செயற்திட்ட ஆய்வும் தேசிய காங்கிரஸின் கல்முனை அமைப்பாளரும், பிரபல உயிரியல் பாட ஆசிரியருமான றிசாத் செரீப், கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன், தேசிய காங்கிரசின் தேசிய கொள்கைப்பரப்பு இணைப்பாளர் யூ.எல்.என். ஹுதா உமர், வீதி அபிவிருத்தி அதிகாரசபை கல்முனை காரியாலய பிரதம முகாமைத்துவ உதவியாளர் ஏ.சி.எம். நிஸார், தொழிநுட்ப உத்தியோகத்தர் எம்.எல்.எம். நௌஸாத், தொழிநுட்ப உதவியாளர் டீ. ஜவஹர்லால், உட்பட தேசிய காங்கிரஸ் கல்முனை மத்தியகுழு உறுப்பினர்கள் ஆகியோரின் பங்குபற்றலுடன் இடம்பெற்றது.
இங்கு கருத்து தெரிவித்த தே.கா அமைப்பாளர் றிசாத், மாநகர சபை உறுப்பினர் ராஜன் ஆகியோர் இந்த வீதி கல்முனை இன நல்லிணக்கத்தின் விதையாக அமையும் என்றனர். மேலும் கடந்தகாலங்களில் முன்னாள் அமைச்சர் மர்ஹூம் AR மன்சூரைத்தவிர வேறெந்த முஸ்லிம் எம்.பிக்களினாலும் தமிழர் பிரதேசங்கள் அபிவிருத்தியடைந்த வரலாறுகள் இல்லை. இந்நிலையை மாற்றியமைக்கும் வண்ணம் தேசிய காங்கிரசின் தலைவரின் இந்த எண்ணம் நாட்டின் மக்கள் மத்தியில் மட்டுமல்ல கல்முனையிலும் சகோதரத்துவத்தை வலுப்படுத்தும் என்றனர். மக்களின் அதிக பாவனையை கொண்ட கல்முனையி முக்கிய வீதிகள் பலதும் இந்த வேலைத் திட்டத்தினூடாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.அதற்கான மதிப்பீடுகளும் நேற்று மேற்கொள்ளப்பட்டன
No comments