ஆறாம் திகதி ஆசிரியர் தினத்தில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
சர்வதேச ஆசிரியர் தினம் ஒக்டோபர் 6ஆம் திகதி இடம்பெறுகிறது.
தற்போது தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கின்ற அதிபர் ஆசிரியர்கள் இத்தினத்தில் நாடு தழுவிய போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவிக்கிறார்.
தமது போராட்டத்தின் 84 ஆவது தினம் கடந்துள்ள நிலையில் தமது கோரிக்கைகளை அரசாங்கம் நிராகரித்து வருவதனால் இத்தீர்மானத்தை மேற்கொள்ளவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் போராட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள பொது மக்கள் மற்றும் பொலீஸ் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர போராட்டம் நடத்துவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
No comments