கல்முனை ரஹ்மத் சமூக சேவை அமைப்பினால் கல்முனை திரு இருதயநாதர் ஆலயத்திற்கு கிணறு அன்பளிப்பு
கல்முனையில் இருந்து வரும் திரு இருதய நாதர் ஆலய வளாகத்தில் மிக நீண்ட காலமாக பக்தர்கள் அடிக்கடி சமய ஆராதனைகளுக்கு ஒன்று சேர வரும்போது அவர்களுக்கு காணப்பட்ட மிக நீண்டகால குடிநீர் பிரச்சினையை கல்முனை மாநகர சபை உறுப்பினர் செலஸ்டீனா அவர்கள் ஊடாக ஆலய நிர்வாகத்தினர் கல்முனை ரஹ்மத் சமூக சேவை அமைப்பிடம் இக்குறைபாட்டினை நிவர்த்தி செய்து தருமாறு வேண்டி இருந்தனர்.
மேலும் இந்த ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் அதிகமாக ஒன்று கூட கூடிய இடமாகவும் இவ்வாலயம் இருந்து வருகின்றது.
அதுமாத்திரமன்றி ஞாயிற்றுக்கிழமைகளில் ஞாயிறு வகுப்புகள் இடம்பெறுவதால் இங்கு வரும் மாணவ மாணவிகளும் தண்ணீர் பற்றாக்குறையால் கடும் சிரமத்தையும் எதிர்நோக்கி இருந்தனர்.
இதற்கினங்கே கல்முனை மாநகரசபை பிரதி மேயரும் கல்முனை ரஹ்மத் சமூக சேவை அமைப்பின் தலைவருமான ரஹ்மத் மன்சூர் அவர்கள் இந்த கோரிக்கையினை ஏற்றுக் கொண்டு அவசரமாக நிறைவு செய்து கொடுத்தார்.
இந்நிகழ்வில் திரு இருதய நாதர் ஆலய தலைமை பாதிரியார் மற்றும் கல்முனை மாநகரசபை உறுப்பினர் செலஸ்டீனா உட்பட இன்னும் பல பிரதிநிதிகள் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் இறுதியாக ரஹ்மத் மன்சூர் அவர்கள் நன்றி தெரிவிக்கும் போது இப்படியான நல்லிணக்க செயற்பாட்டிற்கு உதவிய YWMA நிறுவனத்துக்கு தனது இதயபூர்வமான நன்றியினையும் தெரிவித்துக் கொண்டார்.
No comments