கல்முனை ரஹ்மத் சமூக சேவை அமைப்பினால் வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு!
கல்முனை பிரதேசத்தில் காணப்படும் வசதி குறைந்தவர்களுக்கு சுய தொழில் வாய்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் முகமாக ஒவ்வொரு கிராம சேவை பிரிவிலும் உள்ள கிராம சேவை உத்தியோகத்தர்களினால் அடையாளப்படுத்தப்பட்ட சில பயனாளிகளுக்கு சுய தொழில் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் முகமாக தையல் உபகரணங்கள், ஆடு வளர்ப்பு,கோழி வளர்ப்பு,மரக்கறி வியாபாரத்திற்கான வண்டில் வசதி,சில்லறைக்கடைக்கான பொருட்கள் வழங்கல், நன்னீர் மீன்பிடிக்கான உபகரணங்கள் வழங்கிவைத்தல் போன்ற சுயதொழில் ஊக்குவிப்பு உதவிகளை கல்முனை ரஹ்மத் சமூக சேவை அமைப்பின் தலைவரும் கல்முனை மாநகரசபை பிரதிமேயருமான ரஹ்மத் மன்சூர் அவர்களின் விசேட வறுமை ஒழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ் முன்னேடுக்கப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கவிடயமாகும்.
மேலும் இவ்வேலைத் திட்டத்திற்கு ரஹ்மத் சமூக சேவை அமைப்புடன் இணைந்து உதவி வரும் YWMA நிறுவனத்திற்கும் கல்முனை ரஹ்மத் சமூக சேவை அமைப்பின் தலைவர் ரஹ்மத் மன்சூர் தனது மனம்நிறைந்த நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டார்.
No comments