கிண்ணியாவில் 9ஏ சித்தி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு நிகழ்வு
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
அண்மையில் வெளியான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் கிண்ணியா வலயத்திற்குட்பட்ட, 9ஏ சித்தி பெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும் வைபவம் கிண்ணியா பொது நூலக கேட்போர் கூடத்தில் (10) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கிண்ணியா வலயக் கல்வி அலுவலகமும் கலீலா உம்மா பௌண்டேஷனும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில், கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எ.அனஸ், நகரசபைத் தலைவர் எஸ்.எச்.எம்.நளீம், கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் எ. நஸுஹர்கான், கிண்ணியா பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம். றிஷ்வி, நீர் வழங்கல் அமைச்சின் இணைப்புச் செயலாளர் எம்.எப்.ஏ.மரைக்கார் ஆகியோருடன் பாடசாலை அதிபர்கள், சித்தி எய்திய மாணவர்களின் பெற்றோர்கள் எனப் பலரும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வுக்கு இளம் சமூக சேவையாளர் முஹமட் முஹைடீன் பைஷல் தலைமை தாங்கியதோடு, 9ஏ சித்தி பெற்ற 20 மாணவர்களுக்கு 5000 ரூபா வீதம் சன்மானமும் வழங்கி வைத்தார்.
No comments