அரசாங்கத்தில் ஒட்டியுள்ள சிறு கட்சிகள் நினைத்த நேரத்தில் வெளியேறலாம்- பிரதமர் தெரிவிப்பு
எம்மை விமர்சிப்பவர்களை கட்டுப் படுத்தி கட்டி வைக்க வேண்டிய அவசியம் எமக்கு இல்லை யார் சென்றாலும் அரசாங்கம் முடிந்து விடாது.
எதிர்க்கட்சிகளின் நோக்கமும் நிறைவேறாது எமக்கு போதுமான பெரும்பான்மை இருக்கிறது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் வீழ்ச்சியையே எதிர்க்கட்சிகள் கனவாகக் கொண்டிருக்கின்றன கோவிட் நெருக்கடி காலத்தில் உலக நாடுகள் பலவற்றில் பொருளாதாரத்தில் மந்த கதியே காணப்படுகிறது.இந்தச் சந்தர்ப்பத்தில் எதிர்க்கட்சி ஆட்சியில் இருந்திருந்தால் இதைவிட மோசமான நிலைமை ஏற்பட்டிருக்கும்.
No comments