புத்தளத்தில் ஜனாஸா வாகனம் அங்குரார்ப்பண நிகழ்வு
அன்புடையீர் !
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு !
அல்லாஹ்வின் அருளினால், எமது ஊரின் முக்கியமான தேவையொன்று நிறைவேறியுள்ளது.
அல்ஹம்துலில்லாஹ்!
புத்தளம் ஜனாஸா நலன்புரிச் சங்கத்தினால், கொள்வனவு செய்யப்பட்டுள்ள ஜனாஸாவை எடுத்துச் செல்லும் வாகனம், இன்று ஹிஜ்ரி 1443, ஸபர் மாதம், பிறை 12, 20.09.2021, திங்கட் கிழமை மாலை முதல் தனது சேவையை தொடங்குகின்றது.
இதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (20) மாலை புத்தளம் பகா பள்ளிவாசலில் சங்கத்தின் உறுப்பினர்கள், புத்தளம் பெரியபள்ளிவாயில் பிரதி தலைவர், புத்தளம் பகா பள்ளிவாசல் தலைவர், ஜனாஸா நலன்புரி சங்க தலைவர் உட்பட உறுப்பினர்கள் ஆகியோர் முன்னிலையில் எளிமையான முறையில் நடைபெற்றது.
இவ்வாகனத்தைக் கொள்வனவு செய்வதற்கு உதவி புரிந்த, உள்ளூர், வெளிப்பிரதேச நல்ல உள்ளங்கள், மற்றும் வெளிநாடுகளில் தொழில்புரியும் எமது ஊர் மக்களுக்கும், நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டவர்களுக்கும், பங்களிப்புச் செய்த குழுவினருக்கும் எமது சங்கத்தின் மூலம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஜஸாகுமுல்லாஹ் ஹைரன்!
இன்ஷா அல்லாஹ்! புத்தளம் ஜனாஸா நலன்புரிச் சங்கத்தினால், எதிர்வரும் காலங்களில் பல சேவைகள் செயற்படுத்தப்படவுள்ளன, அதற்காக, உங்கள் ஒத்துழைப்பையும், ஆதரவையும், ஆலோசனைகளையும் வழங்குவீர்கள் என எதிர்பார்க்கின்றோம்.
இவ்வாகனம், புத்தளம் நகர எல்லைக்குள் சேவையில் ஈடுபடும் போது இலவசமாகவும், தூர இடங்களுக்குச் சேவையில் ஈடுபடும்போது நியாயமான கட்டண முறையிலும் சேவையினை வழங்கும்.
(வாகனப் பராமரிப்பு மற்றும் தாபன செலவிற்காகவே இக்கட்டணம்)
இச்சங்கத்தின் சேவை மென்மேலும் விருத்தியடைய அல்லாஹ் அருள்புரிவானாக!
தொடர்புகளுக்கு :
077 840 1400
071 444 3773
071 940 4432
இவ்வண்ணம்,
நிர்வாகக்குழு.
No comments