Breaking News

ஞானசார தேரருக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்தார் அர்ஷாட் நிஸாம்தீன்!

பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் ஞானசார தேரருக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினருமான அர்ஷாட் நிஸாம்தீனால் இன்று (22) முறைப்பாடு செய்யப்பட்டது.


ஞானசார தேரர் அண்மையில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி அல்லாஹ் தான் என்று தெரிவித்த கருத்து தொடர்பில் அவரால் குறித்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.







No comments

note