Breaking News

வெளிநாடுகளில் இருந்து வருகை தருபவர்களுக்கு இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வழிகாட்டல்கள்

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் மத்தள மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்துக்கு வருகைதரும் வெளிநாட்டு மற்றும் உள்ளூர் பயணிகளுக்கான பிசிஆர் வழிகாட்டுதல்கள் இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் என்றும் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் அல்ல என்றும் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அறிவித்துள்ளார்.

இலங்கைக்குள் நுழைய முன்னர், புறப்படும் நேரத்தில் பரிசோதனை முடிவு மறையாக இருந்தால்  (தொற்றுக்குள்ளாகாத), விமான நிலையத்தில் மற்றொரு பிசிஆர் பரிசோதனை செய்ய தேவையில்லை என்றும் பயணிகள் வெளியேற அனுமதிக்கப்படுவர் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்திருந்தது.


ஒக்டோபர் முதலாம் திகதியிலிருந்து தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுக் கொண்ட பயணிகள் இலங்கையை வந்தடைந்த பின்னர் மேற்குறிப்பிட்ட நடைமுறை பின்பற்றப்படும் என்றும் அமைச்சு அறிவித்திருந்த நிலையிலேயே, இன்று நள்ளிரவு முதல் இவ்வழிகாட்டல் அமுல்படுத்தப்படும் என்று அமைச்சர் கெஹெலிய அறிவித்துள்ளார்.


மேலும், வருகைக்கு 2 வாரங்களுக்கு முன்னர் தடுப்பூசியின் 2ஆவது டோஸை வருகைதாரர்கள் முழுமையாக பெற்றிருக்க வேண்டும் என்றும் அமைச்சர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.




No comments

note