நாடு திறக்கப்பட்டாலும் இரவில் பயணத் தடை அமுல் ? - திருமண மரண வீடுகள் ஒன்று கூடல்களில் கடும் கட்டுப்பாடு
எதிர்வரும் முதலாம் திகதி முதல் தற்போது அமுலில் உள்ள பயணத் தடை ஊரடங்குச் சட்டம் நீக்கப்படலாம் என நம்பகமாக தெரிய வருகிறது.
அவ்வாறு பயணத் தடை ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டாலும் இரவு நேரங்களில் 10 மணி முதல் காலை 4 மணி வரை பயணத் தடை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படலாம் என நம்பகமாக தெரிய வருகிறது.
திருமண மரண வீடுகள் மற்றும் பொது வைபவ ஒன்று கூடல்களில் கடுமையான சுகாதார விதிகள் அமல்படுத்தப்படவுள்ளதாகவும் தெரியவருகிறது.
இவ்விடயங்கள் தொடர்பான இறுதி தீர்மானங்கள் எதிர்வரும் 30 ஆம் திகதி நாட்டு மக்களுக்கு சகாதார தரப்புகளால் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
No comments