Breaking News

க.பொ.த.சாதாரண தரப் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கும்,நெறிப்படுத்திய அதிபர்களுக்கும், வழிகாட்டிய ஆசான்களுக்கும் வாழ்த்துக்கள்

நேற்றைய தினம் வெளியான க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சித்திபெற்ற அனைத்து மாணவர்களுக்கும்  நெறிப்படுத்திய அதிபர்கள்  மற்றும் வழிகாட்டிய ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும்  தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றோம்.


Covid 19 கொரோனா காலத்தில் முறையான கற்றல் செயற்பாடுகள் இன்றி பல சிரமங்களுக்கு மத்தியில் க.பொ.த சாதாரண தரப்பரீட்சியில் சித்தி பெற்று சாதனை படைத்த  மாணவர்களின் விடாமுயற்சி பாராட்டத்தக்கதாகும். என்பதோடு மாணவர்களின் இவ்வெற்றிக்கு  முறையான வழிகாட்டல்களை வழங்கிய ஆசிரியர்கள் அதற்கு ஒத்துழைப்புக்களை வழங்கிய பாடசாலை அதிபர்கள் அனைவருக்கும் எமது இதய  பூர்வமான நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.


இப்பரீட்சையில் போதியளவு பெறுபேறுகளைப் பெறாத மாணவ மாணவிகள் மனதளவில் துவண்டு விடாது அடுத்த கட்ட நகர்வை முன்னெடுத்து தொடர் முயற்சியை மேற்கொண்டு உரிய அடைவை அடைய இப்பொழுதிலிருந்தே திட்டமிட்டு செயற்படுவது  சிறப்பாகும் 


சித்தியடைந்தவர்களை பாராட்டும் அதே வேளை போதிய பெறுபேறுகள் பெறாதவர்களை மட்டம் தட்டாது ஊக்கமளித்து முன்னேற வழி வகுப்பதும் சுற்றியுள்ள பொறுப்பாளர் அனைவரது  மீதுள்ள  தார்மீக கடமையாகும்.


பல கஷ்டங்கள் Covid நெருக்கடிகளுக்கு மத்தியில் பாடசாலை நிர்வாகத்தின் அறிவுரைகளுடன் பிள்ளைகளை வழிநடத்திய அன்பு பெற்றோர்கள் அனைவருக்கும் எமது உளம் நிறைந்த  பாராட்டுக்கள்.


 நன்றி

மதுரங்குளி மீடியா




No comments

note