Breaking News

பயணத் தடை ஊரடங்கு காலத்தில் வியாபாரம் செய்வதற்கு அனுமதி கேட்டு சுயதொழில் புரிவோர் சங்கம் வழக்கு

பயணத்தடை தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை மீறி மதுபானம் விற்பனை செய்வதற்கு அனுமதிப்பதாயின் தமக்கும் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதி தருமாறு சுயதொழில் புரிவோரின் சங்கம் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.


நாட்டில் உள்ள சுமார் 10 ஆயிரம் பேர் நகரங்களிலும் வீதியோரங்களிலும் தமது சுய தொழில் வியாபாரங்களை நடத்தி வருவதாகவும் ஆனால் நமக்கு இந் நடவடிக்கைகளில் ஈடுபட தடை விதித்துள்ளதாகவும் இவர்கள் தமது மனுவில் தெரிவித்துள்ளனர்.


எனவே தமது வியாபார  நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதி வழங்க அரசாங்கத்தை அறிவுறுத்துமாறும் இவர்கள் தமது மனுவில் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.




No comments

note