Breaking News

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் விநியோகம்

சீரற்ற வானிலை காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கொலன்னாவ மற்றும் வெல்லம்பிட்டி பிரதேச மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு (2021.06.09) இன்று இடம்பெற்றது. ஜனாதிபதி சட்டத்தரணியும், நீதி அமைச்சருமான அலி சப்ரி அவர்கள் குறித்த பொதியை மக்களுக்கு வழங்கி வைத்தார்.


கொவிட் 19 தொற்றுநோயை எதிர்கொண்டு சுகாதார வழிகாட்டுதல்களின்படி மெகொட கொலன்னாவ மற்றும் கோதத்துவ போபத்த ஆகிய இடங்களுக்கு பொருட்கள் விநியோகம் மேற்கொள்ளப்பட்டது. கொலன்னாவ மற்றும் வெல்லம்பிட்டிய ஆகிய பகுதிகள் ஆண்டுக்கு பல முறை வெள்ளத்தை எதிர்கொண்டு வருவதால், கொலன்னாவ பிரதேச செயலாளருக்கு உரிய நிறுவனங்களால் அதிகபட்ச உதவி வழங்கப்பட்டு வருவதாகவும், 

கூடிய விரைவில் தாழ்வான பகுதிகளில் தடைசெய்யப்பட்ட கால்வாய்கள் மற்றும் வடிகான் அமைப்புகளை   அகற்ற தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். 


இந்நிகழ்வில் பெற்றோலிய வளங்கள் நிறுவனத்தின் தலைவர் மொஹமட் உவைஸ், நீதி அமைச்சரின் ஒருங்கிணைப்பு செயலாளர் ஃபயாட் பாக்கீர், முன்னாள் மாகாண சபை  உறுப்பினர் அசோக லங்காதிலக மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


மாளிகைக்காடு நிருபர்








No comments

note