37 வருடம் ஓர் ஆசானாய் சேவையாற்றி தன் பிறந்த நாளான இன்று (08/06/2021) கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியின் பிரதி அதிபர் ஓய்வு பெறுகின்றார்!!
✍️ ஏ.எச்.பௌசுல் (ஆசிரியர்)
கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியின் பிரதி அதிபர் மதிப்பிற்குரிய எம்.டீ.எம்.பாரி ஆசிரியர் (08/06/2021) ஆம் ஆண்டின் அவருடைய பிறந்த நாளான இன்று 37 ஆவது வருட ஆசிரியர் சேவையிலிருந்து ஓய்வு பெறுகின்றார்.
பிரதி அதிபர் பாரி அவர்கள் சிறந்த தோர் ஆசானும், மார்கப்பற்றுள்ளவர் மட்டுமல்லாது யாருடைய மனதும் தன்னால் புண்பற்றுவிடக்கூடாது என்று பணிவாகவும், முன்மாதிரியாகவும் தனது ஆசிரியர் சேவை காலத்தில் வாழ்ந்து காட்டியவர் என்பதை யாராலும் மறுக்க முடியாத உண்மையாகும்.
பல மாணவர்களின் முன்னேற்றத்திற்கு படி கல்லாகவும்,அவர்களை சிலை போல் செதுக்குவதில் பங்காளராகவும், சமூகத்திற்கு பிரயோசனமான புத்தி ஜீவிகளை உருவாக்கியவர் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
எமது பாடசாலையில் முதலாவது நபராகவே எப்போழுதும் சமூகமளிப்பார்.ஆனால் பாடசாலையை விட்டு செல்லும் போது இறுதியாகவே செல்வதை நான் என் கண்கூடாக அவதானித்துள்ளேன். அது மட்டுமல்லாது எந்த ஒரு சக ஆசிரியருடனும் தன்னுடைய ஆசிரியர் பணியின் போது வன்சொல் பேசியதாக கண்டதுமில்லை,கேள்விப்பட்டதுமில்லை. பெற்றார்கள் பாடசாலை தொடர்பான பிரச்சினைகளுக்கு வரும்பொழுது இன்முகத்துடன் வரவேற்று திருப்திகரமான தீர்வினை பெற்றுக் கொடுப்பார்.
தனது புன்னகை மூலம் சில விசயத்தை உணர்துவதோடு சிறந்த ஒரு நிருவாகியாக இருந்து அனைத்து விடையத்தையும் சூசகமாக கையாண்டு மாணவர்களுடன் (தம்பி) என்ற அன்பான வார்தைகள் மூலம் அழைத்து அவருடைய நல்ல பண்புகளை தனது செயல் வடிவில் உணர்த்தி முன்மாதிரியாக வாழ்ந்து காட்டியவர்.
இவரை பார்த்து நல்ல பண்புகளை நாம் கற்றுக்கொள்ள வேண்டியிருகின்றது.
புளிச்சாக்குளத்தை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட முகம்மது தம்பி மரைக்கார், ஒசிலா பீவி ஆகியோரின் ஆறு பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் நான்காம் பிள்ளையாக 08/06/1961ல் எம்.டீ.எம். பாரி அவர்கள் பிறந்தார்.
தனது ஆரம்பக் கல்வியை தனது ஊரில் அமைந்த உமர் பாரூக் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்பதற்காக 1967ஆம் ஆண்டு இணைந்து கொண்டார்.
அதனை தொடர்ந்து உயர் கல்வியின் நிமிர்த்தமாக தனது ஊரில் கற்க முடியாது என்ற காரணத்தினால் அன்றைய நாளில் பிரபல்யமாக இருந்த கல்பிட்டி அல் அக்ஷா கல்லூரிக்கு வனிக பிரிவில் கற்பதற்காக 1976ஆம் ஆண்டு தொடக்கம் 1980ஆம் ஆண்டு வரை கல்வியை தொடர்ந்தார்.
1985ஆம் ஆண்டு ஆசிரியர் தொழிலுக்காக அட்டாளச்சேனை பயிற்சி கல்லூரிக்கு சென்று 1985ஆம் ஆண்டு முதன் முதலாக ஆசிரியர் தொழிலைப் பெற்று கொத்தான்தீவு முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தனது கன்னி பதவியை ஆரம்பித்தார். அங்கிருந்து மீண்டும் ஆசிரியர் பயிற்சிக்காக 1987 - 1988 வரை அட்டாளச்சேனை ஆசிரியர் கலாசாலைக்கு சென்றார்.
1994 ஆண்டு புத்தளத்தை பிறப்பிடமாகக் கொண்ட ஜனூபா அவர்களுடன் திருமணம் பந்தத்தில் இணைந்து மூன்று பிள்ளைகளை பெற்ற பாக்கியத்தையும் அடைந்தார். 1995 ஆம் ஆண்டு தேசிய கல்வி நிறுவனத்தில் (NIE)யில் BED பட்டத்தை நிறைவு செய்து தனது தொழில் தகமையை விருத்தி செய்தார்.
1989 தொடக்கம் 2006 ஆண்டு வரை தாராக்குடி வில்லு முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தமிழ் பாட ஆசிரியராக கற்பித்தலுடன் பல்வேறு அபிவிருத்தி பணிகளிலும் ஈடுபட்டு அப்பாடசாலையின் வளர்ச்சியில் பங்களித்தார்.
அதனைத் தொடர்ந்து 2006 ஆம் ஆண்டு தான் கற்ற பாடசாலைக்கு ஆசிரியராக வருகை தந்து அங்கு வீழ்ச்சியடைந்திருந்த தமிழ் பாடத்தை கட்டியெழுப்புவதற்காக பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை அறிமுகப்படுத்தி வெற்றியும் கண்டார். அதன் மூலம் இவர் காலத்தில் உருவாக்கிய ஆசிரியர்களும் ஏனைய அரசாங்க உத்தியோகத்தர்களும் இதற்கு சான்றாக அமையும். அதனைத் தொடர்ந்து 2010 ஆண்டு புளிச்சாக்குளம் உமர் பாரூக் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் ஏற்பட்ட அதிபர் வெற்றிடத்தை நிறப்புவதற்கு ஊரின் பல்வேறு முக்கியஸ்தர்களின் வேண்டுகோளுக்கினங்கவும், கல்வி காரியாலயத்தின் ஆலோசனைக்கினங்கவும் அப்பதவியை பொறுப்பெடுத்தார். அதன் நிமிர்த்தம் அப்பாடசாலை இதுவரை கண்டிராத பல பௌதீக அபிவிருத்தியும், கல்வி வளர்ச்சியும் இவர் மூலம் ஏற்பட்டது. அதன் நிமிர்த்தமாக உமர் பாரூக் முஸ்லிம் மகா வித்தியாலயம் வரலாறு காணாத நூற்றாண்டு (1913 - 2014) விழாவை இவரின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டது யாவரும் அறிந்ததே.
அதனைத் தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு புளிச்சாக்குளம் உமர் பாரூக் முஸ்லிம் மகா வித்தியாலயத்திலிருந்து இடம் மாற்றம் பெற்று கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரிக்கு பிரதி அதிபர் பதவியுடன் தனது கடமையை பொறுப்பேற்றார்.இக்காலத்தில் தமிழ் பாடம் உட்பட ஏனைய புரகீர்த்தி செயற்பாடுகளிலும் தன்னை அர்ப்பணித்து செயற்பட்டார். 2019ஆம் ஆண்டு கல்லூரியின் அதிபர் சகோதரர் எம்.எஸ்.எம்.சஹீர் அவர்கள் இடமாற்றம் பெற்று சென்றதன் காரணமாக கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியில் பல்வேறு விதமான நிருவாக சிக்கல்கள் ஏற்பட்ட பொழுது பொறுத்தமான அதிபராக பாடசாலையிலிருந்த எம்.எச்.எம். தௌபீக் அவர்களை அப்பதவிக்கு அமர்த்தும் படி ஆலோசனை வழங்கி அதனை செயற்படுத்தினார். அவ்விடத்தில் அச்சிக்கல்களை செம்மையாகவும், நேர்த்தியாகவும் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையில் தீர்த்து அப்பாடசாலை முன்பிருந்த அதே அபிவிருத்தியில் கொண்டு சென்ற பங்கு இவரையே சாரும்.
இவர் அதிபருக்கான ஒரு முன்னுதாரணமான அதிபர் அதேவேளை இவர் கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியில் பிரதி அதிபராக இருந்தாலும் அதிபர், உட்பட சகல ஆசிரியர்களும் இவரின் கட்டளைகளை அதிபரின் கட்டளையாக ஏற்று செயற்படுவார்கள். அதே நேரம் இவர் எமது பாடசாலையின் மூத்த ஆசிரியர் என்பதனால் உயரிய கண்னியம் கொடுத்து இவரின் சொல்லுக்கு மறுசொல் கூறியதாக இதுவரை யாருமில்லை இவரிடம் ஒரு அதிபருக்கான சகல பண்புகளும் நிறைந்து காணப்பட்டது.
இவருடைய எஞ்சிய காலம் அல்லாஹ்தஆலா சகல சௌபாக்கியங்களுடன் நீண்ட ஆயுளையும், உடல் ஆரோக்கியத்தையும் கொடுப்பதோடு அவரது வாழ்நாளை மகிழ்ச்சிகரமாக கழிக்க அல்லாஹ்தஆலா உதவி செய்ய வேண்டும். என பிரார்த்திக்கின்றேன். அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் அணைவரும் நன்றி உணர்வோடு இருப்பார்கள். என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
நட்புடன்
ஏ.எச்.பௌசுல் ஆசிரியர்
பு/கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி.
No comments