Breaking News

பொதுமக்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி வழங்குவதற்கான அறிவித்தல்கள் காட்சிப்படுத்தல் !

மாளிகைக்காடு நிருபர் 

பொதுமக்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி வழங்குவதற்கான முன் ஏற்பாடுகளுக்கான விளம்பர சுவரொட்டிகள் மற்றும் அறிவித்தல்கள் சாய்ந்தமருது பிரதேசத்தில் காட்சிப்படுத்தும் நடவடிக்கைகள் இன்று முதல் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எம்.அல் அமீன் றிசாட் அவர்களின் தலைமையில் சாய்ந்தமருதில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.


கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.சுகுணன் அவர்களின் வேண்டுகோளுக்கி ணங்க சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் பொது மக்களுக்கான கொவிட்-19 தடுப்பூசி வழங்குவதற்கான ஆயத்த நடவடிக்கைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரியினால் முதலாவது சுவரொட்டி மற்றும் அறிவித்தல்கள் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் காட்சிப்படுத்தப்பட்டு உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டதை தொடர்ந்து பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் மக்களுக்கான தெளிவூட்டல் சுவரொட்டிகள் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள், வர்த்தக நிலையங்கள், மதஸ்தலங்கள் போன்ற இடங்களில் காட்சிப்படுத்தப்படுத்தப்பட்டு வருகின்றது.


இந் நிகழ்வில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஜே.எம். நிஸ்தார், பொதுச் சுகாதார பரிசோதகர்களான எம்.எம்.பைசல் முஸ்தபா, எம்.என்.எம்.பைலான், ஏ.எல்.எம்.அஸ்லம், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள், சாய்ந்தமருது பிரதேச செயலக பல்நோக்கு அபிவிருத்தி செயலணி பயிலுநர்களும் கலந்து கொண்டனர்.








No comments

note