பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி.!!
ரமழான் மாத நோன்பினை நிறைவு செய்துவிட்டு உலக முஸ்லிம் மக்களுடன் இணைந்து ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை கொண்டாடுகின்ற இலங்கை முஸ்லிம் மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
முஸ்லிம்களின் புனித நூலாக கருதப்படுகின்ற அல்-குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளதன் பிரகாரம் ஒரு மாதம் நோற்கப்படுகின்ற ரமழான் நோன்பின் மூலம் ஆன்மீக ரீதியாகவும் அறிவி ரீதியாகவும் உலகிற்கு எடுத்துச் சொல்லப்படுகின்ற செய்தியானது மிக முக்கியமானது.
நோன்பு காலத்தில் பிறரது வயிற்றுப் பசி தொடர்பாக சரியான புரிதல் ஏற்படுவதன் மூலம் முஸ்லிம்கள் அர்ப்பணிப்புடனான சமூகமொன்றை உருவாக்குவதற்காக உயர்வு- தாழ்வு என்ற வேறுபாடுகளின்றி ஒன்றுபடுகின்றார்கள் என்பது எனது நம்பிக்கையாகும்.
மார்க்க ரீதியான சரியான புரிதல்கள் மூலம் ஒழுக்கமான பிரஜைகளாகவுள்ள முஸ்லிம் சமூகம் வரலாறு பூராகவும் இலங்கை வாழ் மக்கள் மத்தியில் ஏனைய சமூகத்தார் மற்றும் மதங்களுடன் அந்நியோன்னிய உறவொன்றினை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நம்பிக்கையை பழுதடையச் செய்யாமல் முன்னோக்கிச் செல்வதனையே முஸ்லிம் மக்கள் வரும்புகிறார்கள் என்பதனை ஒரு அரசாங்கம் என்ற வகையில் நாம் அறிந்து வைத்திருக்கிறோம் என்பதை இவ்வாறான நாளொன்றில்
ஞாபகப்படுத்த வேண்டும்.
உலகம் பூராகவும் பரவி வருகின்ற கொவிட் தொற்றின் காரணமாக கடந்த வருடம் போன்று இவ்வருடமும் ஈதுல் பித்ர் பெருநாளை விமர்சையாக கொண்டாட முடியாது போனாலும்கூட, அதோடு தொடர்பான மார்க்க விடயங்களை சுகாதார வழிமுறைகளைப் பேணி நடாத்துவீர்கள் என்பது எனது எதிர்பார்ப்பாகும்.
ரமழான் மாதத்தில் சுகாதார வழகாட்டலுக்கு ஏற்ப தொழுகைக்காக பள்ளாவாயல்களில் கூட்டங்களாக கூடாது வீடுகளில் மார்க்க விடயங்களை மேற்கொண்ட அனைத்து முஸ்லிம்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகம் பூராக இவ்வாரான தொற்று நோய்க்கு உள்ளாகி இருக்கின்ற காலத்தில் ரமழான் நோன்பின் மூலம் எதிர்பார்க்கப்படுகின்ற சன்மார்க்க விழுமியங்களை மற்றையவர்களின் நலனுக்காக பயன்படுத்துமாறு உங்கள் அனைவரிடமும் கேட்டுக்கொள்காறேன்.
உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் அருளுடன் கூடிய நோய் பற்றிய அச்சமற்ற, சமாதானமும் சந்தோசமும் நிறைந்த ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்.
மஹிந்த ராஜபக்ஷ
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பிரதமர்
No comments