Breaking News

கல்முனை மாநகர சபை பிரதி மேயர் ரஹ்மத் மன்சூர் விடுக்கும் நோன்புப்பெருநாள் வாழ்த்துச்செய்தி

புனித ரமழான் மாதம் முழுவதும் நோன்பு நோற்றும் ஏனைய இறை வணக்கங்களில் ஈடுபட்டும் இறுதியில் ஈதுல் பித்ர் பெருநாளைக் கொண்டாடும் வேளையில், நமது நாட்டிலும் உலக நாடுகளிலும் வேகமாகப் பரவிவரும்  கொவிட் வைரஸ் தொற்று நோயும் ஏனைய பிரச்சினைகளும் நீங்கி சகல மக்களும் நலமாகவும், நிம்மதியாகவும் வாழ்வதற்கு அல்லாஹ் அருள் புரிய வேண்டுமென கல்முனை மாநகரசபை பிரதிமேயர் ரஹ்மத் மன்சூர் விடுத்துள்ள பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.


மேலும் இஸ்லாமிய நாடுகள் உட்பட, சில நாடுகளில் யுத்தம்,சித்திரவதை,பொருளாதாரத் தடை, பஞ்சம்,வறுமை போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம்களின் விடிவுக்காகவும் இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் கவனம் செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம்.குறிப்பாக,கிழக்கு ஜெரூஸலம், மஸ்ஜிதுல் அக்ஸா மற்றும் ஆக்கிரமிக்கப் பட்ட பலஸ்தீனப் பிரதேசங்களில் பொது மக்கள் மீது அராஜக இஸ்ரேல் அரசாங்கம் மேற்கொண்டு வரும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டுமென சமாதானத்தை நேசிக்கும் மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


இந் நன்னாளில் அல்லாஹ்வைப் அதிகமாகப் பிரார்த்திப்போமாக.




No comments

note