Breaking News

பன்முக ஆளுமை கொண்டவர் மர்ஹும் கமர்தீன் அப்துல் பாயிஸ் - அனுதாப செய்தியில் பௌசுல் ஆசிரியர்

புத்தளம் நகர பிதா கே.ஏ.பாயிஸ் அவர்களின் மரணச் செய்தியை உள்ளத்தால் நம்ப முடியா விட்டாலும் உண்மை!. இந்த நேரத்தில் புத்தளம் மக்கள் மாத்திரமல்ல இலங்கை மற்றும் வெளிநாட்டில் வாழும் முஸ்லிம்கள் அனைவரும் அதிர்ச்சியும்,சோகத்திலும் இருந்தார்கள் என்பது உண்மை.


இருந்தாலும் நகர பிதா கே.ஏ.பாயிஸ் அவர்களைப் பற்றி கூறுகையில் நகர பிதாவாக, பாராளுமன்ற உறுப்பினராக, பிரதியமைச்சராக

புத்தளம் மாமாவட்ட முஸ்லிம்களுக்கு தனித்துவமான ஒரு தலைவாராக திகழ்ந்தவர் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.


குறிப்பாக "புத்தளம் நகரத்தில் உதிர்த்த தலைவர்களில்" புத்தளத்துக்கு வெளியே தலைவர்களை உருவாக்க வேண்டும் என்று ஒரு கனம் சிந்தித்து அதனை செயற்படுத்திய மாபெரும் தலைவர் அல்ஹாஜ் கமர்தீன் அப்துல் பாயிஸ் அவர்கள்.


அந்தவகையில் 2001 ஆம் ஆண்டு அக்கறைப்பற்றுக்கு என்று ஒரு சிறந்த தலைவரை உருவாக்க வேண்டும் என்று என்னி எஸ்.ஆப்தீன் எஹியா அவர்களை  அடையாளம் கண்டு அரசியலுக்குள் ஈர்த்து அக்கறைப்பற்றின் வரலாற்றில் முதன் முறையாக வடமேல் மாகாண சபைக்கு எஸ்.ஆப்தீன் எஹியா அவர்களையும், கல்பிட்டி பிராந்தியம் புத்தளத்துக்கமாக எஸ்.எச்.எம்.நியாஸ் அவர்களையும்,தமிழ் சகோதர்களுக்கு தலைவராக கே.இராதாகிருஷ்ணன் அவர்களையும் அனுப்பி வைத்தார்.


முதல் மாகாண சபைக்கு அனுப்பி வைத்ததோடு வடமேல் மாகாண சபையிலே அதுல - பாயிஸ் ஒப்பந்தம்  ஒன்றை ஏற்படுத்தி இந்த பிராந்தியத்திலுள்ள பாடசாலைகளில் கல்வி, ஆள்புலன்களையும், பௌதீக வாளங்களையும் நிரப்புவதற்கு அந்த வரலாற்று சாசனம் உறுதுணையாக இருந்தது  அதன் மூலம் தொண்டர் ஆசிரியர் நியமனங்களும் வழங்கி வைக்கப்பட்டது.


அதுமாத்திரமல்லாமல் மீண்டுமொரு முறை அக்கறைப்பற்றுக்கு ஏ.எச்.எம்.றியாஸ் அவர்களையும், சட்டத்தரணி ஏ.எம்.கமர்தீன் அவர்களையும், கல்பிட்டி பிராந்தியதில் என்.டீ.எம்.தாஹீர் அவர்களையும் தனது அரசியல் சாணக்கியம் மூலம் மீண்டும் நகரத்துக்கு வெளியே தலைவர்களை உருவாக்கிக் காட்டியும், அதுமட்டுமல்லாது புத்தளம் நகரத்தில்  குறுகிய காலத்தில் கல்வி ரீதியாக, பௌதீக வள ரீதியாக வளம்படுத்திய ஒரு மாபெரும் தலைவர் கே.ஏ.பாயிஸ்.


கல்வியில் கூறுவதென்றால் விஞ்ஞானக் கல்லூரி, திறந்த பல்கலைக்கழகம், சாஹிரா ஆரம்ப பாடசாலை, செய்னம்பு ஆரம்ப பாடசாலை என்பவற்றை குறிப்பிடலாம்.


பௌதீக வளங்களில் விளையாட்டு மைதானம், உள்ளக விளையாட்டு மைதானம், நீச்சல் தடாகம், மீன் சந்தை, மரக்கறி சந்தை, நகர மண்டபம், அல்பா கட்டிடம், புத்தளம் நகரத்தில் அமைந்திருக்கும் முறையான சுற்று வட்டங்கள், காபட் வீதிகள், கொங்ரீட் வீதிகள், முறையான வடிகாலமைப்புகள் என குறிப்பிடலாம்.


எனவே இவரின் மறைவால் துயருற்றிருக்கும் இவரது குடும்பம், புத்தளம் வாழ் மும்மதத்தவர்கள், இலங்கை மற்றும் வெளிநாட்டில் வாழும் முஸ்லிம்கள் அனைவருக்கும் பேதர்ச்சியும் கவலையுமாக இருக்கும் அல்லாஹ்தஆலா ஆன்னாரின் சகல பாவங்களையும் மன்னித்து இவரது நற்காரியங்களை பொருந்திக் கொண்டு உயர்ந்த ஜன்னத்துல் பிர்தௌஸை நஸீபாக்குவானாக  என பிரார்த்திக்கின்றேன்.


ஏ.எச்.பௌசுல் ஆசிரியர் 

பு/கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி

 24/05/2021



No comments

note