யூதர்களின் இலட்சியமென்ன ? ஏன் யுத்தத்தை ஆரம்பித்தார்கள் ? இன்றைய யுத்த முடிவில் இஸ்ரேலின் நிலைப்பாடு ?
பலாத்காரமாக இஸ்ரேல் என்னும் யூத நாடு ஸ்தாபிக்கப்பட்டதிலிருந்து இன்று வரைக்கும் இஸ்லாமியர்களுடன் பாலஸ்தீன மண்ணில் ஏராளமான யுத்தங்கள் நடைபெற்றுள்ளது. அதில் ஒவ்வொரு யுத்தத்தின் முடிவிலும் யூத ராஜ்யம் விஸ்தரிக்கப்பட்டு, பாலஸ்தீனர்கள் அங்கிருந்து விரட்டப்பட்டார்கள்.
நாடோடிகளான யூதர்களுக்கு மூன்று இலட்சியங்கள் இருந்தன. தங்களுக்கென்று ஒரு நாட்டை பாலஸ்தீன மண்ணில் உருவாக்குவது, அங்கிருக்கின்ற இஸ்லாமியர்களை விரட்டுவது, மஸ்ஜிதுல் அக்சாவை உடைத்துவிட்டு அந்த இடத்தில் ”சாலமன்” தேவாலயத்தை அமைப்பது ஆகிய மூன்றுமே அந்த இலட்சியங்களாகும்.
இதில் அமெரிக்கா, பிரித்தானியா ஆகிய நாடுகளின் உதவியுடன் முதலாவது இலட்சியத்தை 1948 இல் அடைந்தார்கள். அதன் பின்பு இரண்டாவது இலட்சியத்தின் பெரும்பகுதி படிப்படியாக நிறைவேற்றப்பட்டாலும் அது முழுமை அடையவில்லை.
அதாவது யூத சனத்தொகையின் விகிதாசாரத்திற்கு சவாலாக இருக்கின்ற காரணத்தினால் பல இலட்சம் இஸ்லாமியர்கள் பாலஸ்தீனிலிருந்து விரட்டப்பட்டார்கள். ஆனாலும் மஸ்ஜிதுல் அக்ஸா அமைந்துள்ள ஜெரூசலத்திலிருந்து இஸ்லாமியர்களை முழுமையாக வெளியேற்றும் பணி பூர்த்தியடையவில்லை.
அத்துடன் மஸ்ஜிதுல் அக்சாவை உடைத்து தரைமட்டமாக்கிவிட்டு அந்த இடத்தில் தங்களது சாலமன் தேவாலயத்தை அமைக்கும் மூன்றாவது இலட்சியத்தினை அடைய முடியவில்லை. ஆனால் அதற்கான அனைத்து வேலைகளையும் ஏற்பாடு செய்துள்ளனர். இதன் காரணமாகவே இஸ்ரேலின் தலைநகராக ஜெரூசலம் அறிவிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தபோது ரொனால்ட் ட்ரம் அறிவித்திருந்தார்.
மனித வரலாற்றில் உலகில் அதிகமான படையெடுப்புக்களும், யுத்தங்களும், கொலைகளும் நடைபெற்ற இடமாக ஜெசூருசலம் என்று வரலாறுகள் கூறுகின்றன.
1967 இல் ஜெரூசலத்தை கைப்பேற்றியபோது ஏன் சாலமன் தேவாலயத்தை அன்று கட்டவில்லை. என்ற கேள்வி எழுகின்றது. இதற்காக இறைவனின் இறுதித்தூதர் “மஷியா” வருவார். தேவாலயத்துக்குள் வைக்கப்படயிருக்கின்ற இறைவனின் சந்நிதியான “ஆரன் ஹப்ரித்” தை அவர்தான் கண்டுபிடிப்பார் என்பது யூதர்களின் நம்பிக்கையாகும்.
கடவுளின் பொக்கிசமான தங்கத்திலாலான “ஆரன் ஹப்ரித்” என்னும் பெட்டியினுள் இறைவனின் சன்நிதி இருப்பதாக யூதர்கள் கூறுகின்றார்கள். அதாவது இந்தப்பெட்டியினுள் இறைவன் மோசேக்கு (மூஸா நபிக்கு) வழங்கிய பத்து கட்டளைகளும், செங்கோலும், இறைவன் வழங்கிய மண்ணா (மண்உ சல்வா) என்னும் உணவும் அதனுள் இருப்பதாக நம்புகின்றார்கள்.
ஆனால் இந்த பொக்கிசத்தை கடந்த இரண்டாயிரம் வருடத்துக்கு மேலாக யாரும் கண்டதாகவோ, குறிப்பாக இயேசு காலத்தில் வாழ்ந்தவர்களாவது அறிந்ததாகவோ இல்லையென்று யூதர்களே கூறுகின்றார்கள்.
ஆனாலும் அந்த பொக்கிசத்துக்கு மேலேதான் “மஸ்ஜிதுல் அக்ஸா” கட்டப்பட்டுள்ளதாகவும், அதனை இடித்துவிட்டு அந்த பொக்கிஷம் இருக்கின்ற இடத்தில் தேவாலயத்தை மீண்டும் கட்டவேண்டும் என்பது யூதர்களின் மூன்றாவது இலட்சியமாகும்.
இங்கே தீவிர போக்குடைய யூதர்கள் மஸ்ஜிதுல் அக்ஸாவை உடைத்துவிட்டு தேவாலயத்தை உடனடியாக கட்ட வேண்டும் என்று நீண்ட காலங்களாக வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் தங்களது இறுதித்தூதர் “மஷியா” வந்து குறிப்பிட்ட பொக்கிசத்தை கண்டுபிடித்ததன் பின்பு தேவாலயத்தை கட்டலாம் என்று வலதுசாரி யூதர்கள் கூறுகின்றார்கள்.
இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் அப்பிரதேசம் இருப்பதனால், அப்பகுதி முழுவதும் சுரங்கங்கள் தோண்டப்பட்டு அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டது. அதில் யூதர்கள் கூறுவதுபோன்று சாலமன் தேவாலயம் கட்டப்பட்டிருந்ததற்கான எந்தவொரு சான்றுகளோ, ஆதாரமோ அல்லது யூதர்களினால் தேடப்படுகின்ற பொக்கிசமோ அங்கு கிடைக்கவில்லை.
எனவே தற்போது இஸ்ரேலினால் திட்டமிட்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த யுத்தத்தின் முடிவில் இஸ்ரேலின் கை ஓங்குமாக இருந்தால், மீண்டும் ஜெருசலம் பகுதியிலிருந்து இன்னும் பல இஸ்லாமியர்கள் வெளியேற்றப்படுவதோடு ஜெருசலத்தை இஸ்ரேலின் தலைநகராக பிரகடனம் செய்யப்பட்டு அதன்பின்பு சாலமன் தேவாலயம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை இஸ்ரேல் மேற்கொள்ளும். இதற்கு சர்வதேசமும் ஒத்துழைப்பு வழங்கும் என்பதில் சந்தேகமில்லை.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
No comments