மாணவர் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு
சர்ஜுன் லாபீர்
கல்முனைக்குடி அஸ்-சுஹரா வித்தியாலயத்தில் மாணவர் தலைவர்கள் மற்றும் வகுப்பு தலைவர்களுக்கான சின்னம் அணிவிக்கும் நிகழ்வு இன்று(5) பாடசாலை அதிபர் எம்.எச்.எஸ்.ஆர்.மஜிதியா தலைமையில் பாடசாலை முற்றத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை பொலிஸ் நிலைய சமூக மேம்பாடு பிரிவு பொறுப்பதிகாரியும்,பிரதம பொலிஸ் பரிசோதகருமான ஏ.எல் ஏ வாஹீட் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சின்னங்களை அணிவித்தார்.மேலும் பாடசாலை அபிவிருத்தி குழு செயலாளர் அமீர் ஏ பாரூக் உட்பட ஆசிரியர்கள் நலன் விரும்பிகள் என பலர் கலந்து கொண்டனர்.
No comments