இலங்கையில் முஸ்லிம் சிறுபான்மை மக்களுக்கும், பிற சமுதாய மக்களுக்கும் இடையில் நல்லிணக்கப் பாலமாக இருந்து பணி ஆற்றுபவர் ரவூப் ஹக்கீம் - பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் வாழ்த்து
இலங்கையில் முஸ்லிம் சிறுபான்மை மக்களுக்கும், பிற சமுதாய மக்களுக்கும் இடையில் நல்லிணக்கப் பாலமாக இருந்து பணி ஆற்றுபவர் ரவூப் ஹக்கீம்
- பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் வாழ்த்து
(திருச்சியிலிருந்து சாகுல் ஹமீத்)
இலங்கையில் முஸ்லிம் சிறுபான்மை மக்களுக்கும், பிற சமுதாய மக்களுக்கு இடையில் நல்லிணக்கப் பாலமாக இருந்து மக்கள் பணி ஆற்றக்கூடிய பண்பாளர் ரவூப் ஹக்கீம் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் பிறந்த நாள் வாழ்த்து செய்தியில் தெரிவித்தார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமுக்கானபிறந்த நாள் வாழ்த்து செய்தியில் மேலும் கூறியுள்ளதாவது,
என் இனிய சகோதரர் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீமுக்கு இன்று 61ஆவது பிறந்த நாள் என அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
எல்லா மதத்தினருக்கும் இனிய நண்பராக இருப்பவர் அவர்,. இறைவன் அருளால் அன்னார் பல்லாண்டு வாழ்ந்து சமுதாயத்திற்கும்,மக்களுக்கும் சிறந்த பணியைத் தொடர வாழ்த்துகிறோம். தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அனைவர் சார்பிலும் இந்தப் பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்.
இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் வாழ்த்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments