Breaking News

அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை அதிபராக அதிபர் தரம் ஒன்றை சேர்ந்த எம்.எஸ்.நபார் பொறுப்பேற்றார் !

நூருல் ஹுதா உமர் 

அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை அதிபராக அதிபர் தரம் ஒன்றை சேர்ந்த எம்.எஸ்.நபார் அவர்கள் கடந்த திங்கட்கிழமை (19) முதல் பொறுப்பேற்றார். கல்முனை கமு/ கமு/ அல்- பஹ்ரியா மகா வித்தியாலயத்தில் அதிபராக கடமை புரிந்தார்.SLPS-I ஐச் சேர்ந்த இவர் தேசிய பாடசாலை அதிபர் நேர்முகத் தேர்வில் தெரிவுசெய்யப்பட்டதை அடுத்தே  அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். 


பேராதெனிய பல்கலைக்கழக கலைமானி சிறப்பு பட்டதாரியான இவர் ஆரம்பத்தில் பொது முகாமைத்துவ உதவியாளர் சேவை பரீட்சையில் சித்தியடைந்து சமூக சேவை திணைக்களம்,கட்டிடங்கள் சேவை திணைக்களத்தில் பணியாற்றிய பின்,பட்டதாரி ஆசிரியர் சேவையில் தெரிவு செய்யப்பட்டு சாய்ந்தமருது கமு/ கமு/ மல்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலயம், கமு/ கமு/ அல்- பஹ்ரியா மகா வித்தியாலயத்தில் ஆசிரியப் பணி புரிந்தார். மிக குறுகிய காலத்தில் அதிபர் சேவைப் பரீட்சையில் சித்தியடைந்து சாய்ந்தமருது கமு/ கமு/ அல்- ஜலால் வித்தியாலயம், மாவடிப்பள்ளி கமு/ கமு/ அஸ்ரப் மகா வித்தியாலயம், கல்முனை கமு/ கமு/ அல்- பஹ்ரியா மகா வித்தியாலயத்தில் அதிபராக கடமையாற்றி வந்த நிலையிலையிலையே இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.




No comments

note