Breaking News

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை...

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் உயிர்;த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை மீதான ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை…

 

இந்த முக்கிய விவாதத்தில் விசேடமாக ஆரம்பத்திலேயே உயிர்;த்த ஞாயிறு தாக்குதலில் கொல்லப்பட்ட கத்தோலிக்க, கிறிஸ்தவ ஏனைய சமயங்களைச் சேர்ந்த அப்பாவி மக்களுக்காக எமது கவலையையும், மன வேதனையையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

 

தற்போதைய அரசாங்கமும் கடந்த அரசாங்கமும் கூட இவ்வாறான ஆணைக்குழு விசாரணைகளை விதந்துரை செய்வதற்கு அமைச்சரவை உப குழுக்களை நியமிக்கும் போது சகல தரப்பினையும் பிரதிநிதித்துவப்படுத்தக் கூடியவாறு அமைந்திருக்க வேண்டுமென்பதில் கவனஞ் செலுத்தவில்லை. தமிழ், முஸ்லிம் மக்களைப் பொறுத்தவரை டக்ளஸ் தேவானந்தா, அலி சப்ரி ஆகிய அமைச்சர்களும் அமைச்சரவையில் உள்ளனர் என்பதை சுட்டிக்காட்டுகின்றேன். அவ்வாறான ஒருவிதமான நம்பகத் தன்மை இருந்திருக்கும். சமூகளின் உள்ளார்ந்த விடயங்கள் தொடர்பில் போதிய தெளிவு இல்லாமல், விதந்துரைகள் மேற்கொள்ளப்படக் கூடிய நிலைமை இருந்திருக்கின்றது. அதனைத் தவிர்ந்து கொள்ள வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். இந்தத் தாக்குதலில் முதன்மையாக கத்தோலிக்க மக்களே பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த போதிலும், அவ்வாறே முஸ்லிம்களும் உயிர்த்த் ஞாயிறு தாக்குதலின் பின்னர் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

 

எனக்கு ஒதுக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட நேரத்திற்குள் நிறைய விடயங்களை மேற்கோள் காட்டிப் பேச வேண்டியிருக்கின்றது.

 

ஆணைக்குழுவைச் சேர்ந்த பொலீஸாரிடம் வாக்குமூலமளித்தவர்களின் எண்ணிக்கை 1480 பேர் அவர்களில் 480 மட்டுமே சாட்சியமளிக்க அழைக்கப்பட்டிருந்தனர். இதற்கிடையில் பல காரணிகளை சுட்டிக்காட்டியாக வேண்டும்.

 

கடந்த 5ஆம் திகதி ஆங்கிலப் பத்திரகையொன்றில் வெளியான “ஈஸ்டர்” பனீஸ் அண்ட் பனீஸ் ஓப் அதர் சீசன்” என்ற கட்டுரையில் “போர்ன் ஐடென்டிடி” என்ற படமாக வந்த நாவல் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. ரொபர்ட் ருட்லொங்க் என்ற ஆங்கில எழுத்தாளரால் அது எழுதப்பட்டது. அதில் அங்குமிங்குமாக தப்பியோடுகின்ற ஜேஸன் போர்ன் என்ற கதாபாத்திரத்தின் திருவிளையாடல்கள் பற்றிக் காணப்படுகின்றது. ஆழ்ந்த இரகசியங்கள் பொதிந்திருக்கலாம். ஆனால், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்பது தான் முக்கியமாகும். அதேபோன்றதொரு திரைப்படமாகத்தான் இந்த விடயமும் கையாளப்பட்டுள்ளது.

 

அவ்வாறே இந்தப் படத்தின் பிரதான சூத்திரதாரியாக நௌபர் மௌலவி என்பவர் காட்டப்படுகின்றார். அவர் தான் கதை, வசனம், நெறியாள்கை மற்றும் தயாரிப்பாளராக திகழும் விதத்தில் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.

அமைச்சர் சரத் வீர சேகர பிரதான சூத்திரதாரியை அடையாளப்படுத்தி அறிவித்தாகிவிட்டது. அந்த அமைச்சர் இவ்வாறு தான் ஆரம்பத்தில் ஒன்றை சொல்லிவிட்டு ஓரிரு நாட்களில் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வார்.

ஒருவர் திரைக்கதை, வசனத்தை செய்திருக்கலாம். ஸஹரான் கதாநாயகனாக இருந்திருக்கலாம். தற்கொலை செய்துகொண்ட ஏனைய ஆறு, ஏழு பேரும் துணை நடிகர்களாகவும், காணாமல் போன சாரா புலஸ்த்தினி நடிகையாகப் பாத்திரமேற்றிருக்கலாம். ஆனால், தயாரிப்பாளரும், இயக்குனரும் யார்? என்பது தான் கேள்வி.

 

நெறியாள்கை (இயக்குதல்) தயாரிப்பு என்பன மிகவும் கைதேர்ந்தவர்களால் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன என மேற்கோள் காட்டிக் கூறமுடியும்.

அறிக்கையின் 93ஆம் பக்கத்தில் 2007ஆம் ஆண்டின் இறுதியில் ஸஹ்ரான் இந்தியாவிலிருந்த அபூ ஹிந்த் என்பவருடன் தொடர்பிலிருந்ததாக கூறப்பட்டுள்ளது. நவ்பலுக்கு அது தெரியும். அவருடன் தொடர்பு கொண்டிருந்தார். அபூ ஹிந்த் என்பவர் சிரியா நாட்டுடன் தொடர்பு வைத்திருந்ததாக ஸஹரான் மனைவி ஹாதியாவிடம் கூறியுள்ளார். திரீமா மற்றும் டெலிகிராம் செயலிகளைப் பயன்படுத்தி தமிழில் உரையாடியுள்ளனர். அவ்வாறான தொழில் நுட்பத்தையும் அவர்கள் கையாளக் கூடியவர்களாக அப்போதே இருந்திருக்கின்றனர். உளவுப்பிரிவினரால் கூட கண்டறிய முடியாதளவுக்கு இவ்வாறான செயலிகளை இயக்கக் கூடிய திறமை அவர்களிடம் இருந்திருக்கின்றது. இது பற்றி ஆணைக்குழுவும் குறிப்பிட்டிருந்தது.


ஹாதியாவின் சாட்சியத்தை பதிவு செய்வதற்கு சட்டமா அதிபர் திணைக்களமும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. பிரதி சொலிசிற்றர் ஜெனரல் ஒருவரால் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு, தற்போது உயிருடன் இருக்கும் சாட்சியாக ஹாதியாவை விசாரிப்பதாக தீர்மானிக்கப்பட்டது. அவருடாகத்தான் அபூ ஹிந்த் பற்றியதும், மற்றும் முக்கியமானவையுமான தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. காணாமல் போயுள்ள சாரா புலஸ்தினி பற்றி ஹாதியா கூறியுள்ளார். சாய்ந்தமருதில் குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்ற போது சாராவின் குரலை தாம் செவிமடுத்ததாகவும் ஹாதியா தெரிவித்துள்ளார். அத்துடன் சாரா புலஸ்த்தினி இந்தியாவிற்கு தப்பிச் செல்வதை தாம் நேரில் கண்டதாகவும் சாட்சிகள் இருவர் தெரிவித்துள்ளனர்.

 

இதன் நெறியாள்கை மற்றும் தயாரிப்பின் பின்புலம் பற்றி பார்ப்பதனால் முழு மத்திய கிழக்கிலும் உள்ள நாடுகளில் பிரச்சினைகளை ஏற்படுத்தி, அவற்றை சவாலுக்குட்படுத்தி அங்கு ஸ்திரமற்ற தன்மையை தோற்றுவித்த மறை சக்தி எதுவாக இருக்கலாம் என்பதை தேடிப் பார்க்க வேண்டும். அவ்வாறு பார்க்கப் போனால் அந்தச் சக்தி வேறெதுவுமல்ல, ஐரோப்பிய நாடுகள் சிலவற்றால் இரண்டாம் உலக மகா யுத்ததுடன் அங்கு தோற்றுவிக்கப்பட்ட இஸ்ரவேல் என்பது புலப்படும்.

 

106ஆம் பக்கத்தில் காணப்படும் குறிப்பின்படி 10.10.2018இல்  சஹ்ரானின் முகநூல் பக்கத்த்pல் காணப்படும் பக்கம் பின் அபூ எனடபவருக்கான கடிதம் உள்ளது. முகநூல் கணக்கொன்றை வைத்திருக்கும் பக்கம் பின் அபூ ஐ.எஸ்.ஐ.எஸ். சித்தாந்தத்தை ஆதரித்து வந்த போதிலும், இந்திய உளவுப் பிரிவை சேர்ந்தவர் எனக் கூறப்படுகின்றது. அதற்கு பதிலாக  11.10.2018 அன்றைய பக்கம் பின் அபூவின் முக நூல் பதிவில் சஹ்ரான் ஐ.எஸ்.ஐ.எஸ்.க்கு சார்பாக இருந்தாலும், இளைஞர்களை கவர்ந்திழுக்கும் இஸ்ரேல் உளவுப் பிரிவின் முகவர் என காணப்பட்டுள்ளது.

 

இது தான் மறைமுகமான சக்தி. எனவே தான் இஸ்ரேல் தான் இதன் பின்னணியில் இருந்துள்ளதா? என்ற சந்தேகம் எழுகின்றது.

சஹ்ரான் வெவ்வேறு பிரதேசங்களுக்கு இடம் மாறிக்கொண்டிருந்த போது தங்களுடன் சாராவும் வந்ததாக மனைவி ஹாதியா கூறியுள்ளார்.

அபூ ஹிந்தை எமது உளவுப் பிரிவினர் தொடர்பு கொண்ட போதும், இந்திய உளவுப் பிரிவினரிடம் அவர்களுக்கு கிடைத்த புலனாய்வுத் தகவல்கள் தொலைபேசி மூலமாக அறிந்தவையா என கேட்ட போது, இல்லை அவை உயிர் வாழ்ந்துக் கொண்டிருக்கும் இந்தக் குழுவைச் சேர்ந்த ஒருவராலேயே பெறப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது. அவ்வாறானால், ஏன் இது பற்றி கண்டறியப்படவில்லை? இது மர்மமாகவே இருக்கின்றது.

 

இதேவேளையில், அப்பாவிகளான சிலரும் இதனோடு சம்பந்தப்படுத்தப்படுவது கவலைக்குரியது. இந்த இடத்தில் அமைச்சர் அலி சப்ரி இல்லை. என்றாலும், நான் கூறவேண்டும் திறமையான இளம் வழக்கறிஞரான ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் வேண்டுமென்றே கைது செய்யப்பட்டுள்ளார். அவர் 2015க்கும் 2019க்கும் இடைப்பட்ட காலத்தில் கரைத்தீவு, வனாத்தவில்லுவில் அல் - லுஹ{ரியா அரபுக் கல்லூரி பயிற்சி முகாமை நடத்தி வந்ததாக குற்றம் சாட்டப்படுகிறது. அது பற்றி மேலதிகமாக சேர்க்கப்பட்டுள்ளது. ஏனைய பயிற்சி முகாம்களை பற்றி திட்டவட்டமாக உரிய காலம் பற்றி குறிப்பிடப்பட்ட போதிலும், இவரது விடயத்தில் அவ்வாறு திட்டவட்டமாக உரிய காலம் சுட்டிக்காட்டப்படவில்லை. இப்பயிற்சி பாசறைக்குச் சென்று வந்தவர்களாக சஹ்ரான், இல்ஹாம் அஹ்மட், சாரா புலஸ்த்தினி மகேந்திரன், சாரா ஜெஸ்மின், பாத்திமா ஜிப்ரி, நௌபர், றிழ்பான் உட்பட மற்றும் சிலர் குறிப்பிடப்பட்டுள்ளனர். இது தொடர்பில் வேறு எந்த சாட்சியங்களும் இல்லை. மஜிஸ்திரேட் நீதவான் முன்னிலையில் சிறுவர்களை வற்புறுத்தி இதற்கு வாய்ப்பாக சாட்சியம் பதிவு செய்யப்பட்டது.

 

2019ஆம் ஆண்டில் 52 நாள் பலவந்தமாக அமைக்கப்பட்ட அரசாங்கத்திற்கு எதிராக தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவருக்காக சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் வாதாடியதனால் தான் பழிவாங்கப்படுகிறார். இதில் 131ஆம் பக்கத்தில் 9ஆவது அம்சமாக சொருகப்பட்டு இடம்பெறச் செய்யப்பட்ட விடயம் மேலதிகமாக குறிப்பிடப்பட்டதாகும்.

 

அடுத்து, பேராசிரியர் லுக்மான் தாலிப் இதனோடு சம்பந்தப்படுத்தப்படுவதோடு அவர் இத்தகைய பயங்கரவாத தாக்குதலோடு தனக்கும் தனது மகனுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என வழக்கு தொடுத்துள்ளார். அவர்களது உயிருக்கு அச்சுறுத்தல் நிலவுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

அவர் செய்த குற்றம் என்ன? பேராசிரியர் லுக்மான் தாலிப்பின் மனைவியும் பிள்ளைகளும் பலஸ்தீன காஸா தீரத்தில் முன்னொரு போது எம்.வீ.மர்மரா என்ற கப்பல் உட்புகுந்த முற்றுகையின் விளைவாக இஸ்ரேலை சினமடைய நேர்ந்தன் காரணமாகவே அவர்கள் மீது இவ்வாறு சோடிக்கப்பட்டுள்ளது.  

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம்.சுஹைர் கடந்த ஏப்ரல் 5ஆம் திகதிள ஆங்கிலப் பத்திரிகையொன்றில் தலை சிறந்த இஸ்லாமிய பேரரிஞர்கள் தீவிரவாதிகளாக பிரஸ்தாப அறிக்கையில் அடையாளப்படுத்தப்பட்டமை குறித்து கண்டனம் வெளியிட்டுள்ளார். அவர்கள் தீவிரவாதத்தை தூண்டினார்கள் என்பதற்கான எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை. அவர்களில் சிலர் உயிருடன் இல்லை.

 

உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் ஜமாத்தே இஸ்லாமின் அமீராக நீண்ட காலம் இருந்தவர். அவர் மீண்டும் கைது செய்யப்பட்டு குற்றம் சுமத்தப்பட்டுள்ளார். இஸ்லாத்தில் பல்வேறு சிந்தனை வட்டங்கள் உள்ளன. மௌலானா அபுல் அஃ;லா மௌதூதி தலை சிறந்த இஸ்லாமிய பேரறிஞர்களில் ஒருவர். அவரே ஜமாத்தே இஸ்லாமி அமைப்பின் ஸ்தாபகரும் ஆவார். அன்னார் குர்ஆனுக்கு விரிவுரை எழுதியோடு இஸ்லாம் சகிப்புத் தன்மையை போதிக்கும் மார்க்கம் என்பதை நிலைநாட்டி வந்துள்ளார். இஸ்லாம் சமாதானத்தை நேசிக்கும் மார்க்கம் எனவும் போதித்து வந்துள்ளார். அவரைப் போன்றே யூசுப் அல் கர்ளாவி மற்றுமோர் இஸ்லாமிய பேரறிஞரும், சிந்தனையாளரும் ஆவார். அவர் முன்னொருபோது  ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனத்தில் இஸ்ரேல் மீது தற்கொலை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதை நியாயப்படுத்தியதாக கூறப்பட்டது. அதற்காக இஸ்ரேல் அவர் மீது விசனமடைந்திருந்தது. அதன் விளைவாக தான் இவ்வாறு நடக்கின்றது. வெளிச்சக்திகளின் தேவைகளுக்காகவே இவ்வாறு நடைபெறுகின்றது.

 

“ஹஸலக வீரயா” என்றழைக்கப்படும் இராணுவ வீரர் யானையிரவு முகாமிற்கு அண்மையில் விடுதலைப் புலிகளின் டிப்பர் வாகனத்தின் மீது பாய்ந்து தற்கொலை தாக்குதல் மேற்கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டதற்காக பாராட்டப்படவில்லையா?

 

இந்தத் தாக்குதலில் சம்பந்தப்பட்ட சிலரோடு எமது புலனாய்வுப் பிரிவினர் நட்புறவு பூண்டிருந்தனர். சாய்ந்தமருதில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தொடர்ந்து ஏப்ரல் 25ஆம் திகதி இடம்பெற்ற குண்டு வெடிப்பில் அஹ்மட் லெப்பை முஹம்மட் நியாஸ் என்ற தற்கொலைதாரி இராணுவ புலனாய்வுத்துறையில் இருந்துள்ளார்.

 

கைது செய்யப்பட்டுள்ள ஹயாத்து முஹம்மத் அஹ்மத் மில்ஹான் ஒரு இராணுவ புலனாய்வு அதிகாரி, அவர் 2006ஆம் ஆண்டு பொலிஸ் பாயிஸ் எனப்படும் ராசிக் முஹம்மத் பாயிசுடன் யுத்தக காலத்தின் போது இராணுவ உளவுத் துறையில் கடமையாற்றியவரோடு தொடர்பில் இருந்துள்ளார். இவர்களை கொண்டே ஸஹரான் தனது ஆயுதப் பயிற்சி முகாம்களில் பயிற்சி வழங்கியுள்ளார்.

 

ஆமி மொஹிதீன் என்பவர் குற்றப்புலனாய்வுக்கு தகவல் கொடுத்தவர். இருப்பினும்,  இவர்கள் அனைவரும் இறுதியில் பயங்கரவாதிகள் என அடையாளப்படுத்தியுள்ளனர். அப்படியென்றால், இலங்கையின் புலனாய்வுத் துறையினரால் வளர்க்கப்பட்ட நபர்களே இவ்வாறு செய்கின்றனர் என இலங்கையின் புலனாய்வு துறையினரால் கண்டறிய முடியவில்லையா என்ற கேள்வி எழுகிறது. தங்கள் மத்தியில் இருந்தவர்களே இவர்களோடு சேர்ந்து இவற்றை செய்துள்ளனர் என்பது இறுதியில் வெளிவந்துள்ளது. இதனால் பொதுவான சந்தேகம் எழுவதில்லையா? நான் முழு உளவுத்துiறினரையும் குற்றஞ்சாட்ட வில்லை. இந்த நாட்டின் புலனாய்வு துறைக்கும் உளவுப் பிரிவுக்கும் இலங்கை முஸ்லிம்களின் பங்களிப்பு மகத்தானதாக இருந்தே வந்திருக்கின்றது. உயிர் தியாகம் செய்த முஸ்லிம் உயரதிகாரிகள் பலர் இருந்திருக்கின்றனர்.


இதைவிட ராஜன்ஹ{ல் எழுதிய நூலில் பல பயனுள்ள ஆழமான விடயங்கள் அடங்கியுள்ளன.  அத்துடன் அரசாங்கத்தில் பல்வேறு குற்றச் செயலை கண்டறியும் தரப்புக்களுக்கு இடையில் முரண்பாடுகளும் ஒன்றுக்கொன்று வித்தியாசமான அணுகுமுறைகளும் இருந்து வந்துள்ளன.

எனவே தான் இந்த தாக்குதல் குறித்து சரியாக கண்டறியப்பட வேண்டும். விசாரணைக் குழுவின் ஆணையாளர்கள் சில விடயங்களை மேலோட்டமாக கையாண்டுள்ள போதிலும் ஆணைக்குழுவினரின் அறிக்கையில் நல்ல பல அம்சங்களும் அடங்கி இருக்கத்தான் செய்கின்றன.


வடக்கில் இடம்பெற்ற பிரிவினைப் போராட்டம் மற்றும் ஜே.வி.பி. கிளர்ச்சியின் 50ஆவது நிறைவு ஆகியவற்றை நினைவு கூர்கின்றனர். ஆனால், உயிர்;த்த ஞாயிறு தாக்குதலை மையப்படுத்தி அதனை நினைவு கூர்வதற்கு முஸ்லிம்களில் எவரேனும் முன்வரவில்லை. ஏனெனில், இந்த தாக்குதலுக்கும், முஸ்லிம் சமூகத்திற்கும் எதுவிதமான தொடர்புகளும் இல்லை. இந்த தாக்குதல் முற்றுமுழுதாக பயங்கரவாத தாக்குதலேயாகும். இதில் முஸ்லிம்களை பொறுத்தவரை எந்தவித அரசியல் நோக்கமும் இல்லை.

 

எனவே தான் இந்த தாக்குதலுக்கு பின்னால் இருந்த முக்கிய சூத்திரதாரி யார் என்பதை கண்டறிந்து அறிவிக்கப்பட வேண்டும். அது முஸ்லிம் சமூகத்திற்கும் மிகவும் முக்கியமாது.




No comments

note