Breaking News

அதாஉல்லா விளையாட்டு மைதான கரப்பந்தாட்ட திடல் அமைக்கும் வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது !

மாளிகைக்காடு நிருபர் 

அக்கரைப்பற்று பிரதேச சபை நிர்வாகத்தின் கீழுள்ள அதாஉல்லா விளையாட்டு மைதான கரப்பந்தாட்ட திடல்  அமைக்கும் வேலைத்திட்டம் அக்கரைப்பற்று பிரதேசசபை தவிசாளர் எம்.ஏ. றாஷீக் தலைமையில் இன்று (08) ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் அக்கரைப்பற்று பிரதேசசபை உப தவிசாளர் ஏ.எம். அஷ்ஹர், அக்கரைப்பற்று பிரதேசசபை உறுப்பினர்கள், அக்கரைப்பற்று பிரதேசசபை செயலாளர் எல்.எம். இர்பான், பிரதேசசபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தனர். 


இவ்வேலைத்திட்டத்தினை இப்பிராந்திய இளைஞர்களின் நன்மை கருதி வெற்றிகரமாக செயற்படுத்த முன்னெடுப்புக்களை செய்த  வன ஜீவராசிகள் இராஜாங்க அமைச்சரின் இணைப்புச் செயலாளர் அகமட் முகிடீன் நிஹால், மற்றும்  இவ்வேலைத்திட்டத்திற்கு  ஒத்துழைப்பு வழங்கிய அக்கரைப்பற்று மாநகர சபை முதல்வர் அதாஉல்லா அஹமட் ஸகி ஆகியோருக்கும் இந்நிகழ்வில் பிராந்திய இளைஞர்களினால் நன்றி நவிலல் உரை நிகழ்த்தப்பட்டது.





No comments

note