Breaking News

பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு கௌரவமளித்த விளாஸ்டர் !

மாளிகைக்காடு நிருபர்

சாய்ந்தமருது விளாஸ்டர் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட "றபீக் கிண்ண மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியின்" இறுதி நாள் நிகழ்வு இன்று (11) மாலை சாய்ந்தமருது பௌசி விளையாட்டு மைதானத்தில் விளாஸ்டர் விளையாட்டுக்கழக முகாமையாளர் எம்.ஐ.எம். பஸ்மிரின் நெறிப்படுத்தலில் கழகத்தின் தவிசாளர் ஏ.எல். முஹம்மத் தலைமையில் நடைபெற்றது.


இந்த இறுதியாட்ட நிகழ்வில் கல்முனை பிரதேசத்திலிருந்து பிராந்திய நிருபர்களாக துணிச்சலுடன் கடமையாற்றும் நூருல் ஹுதா உமர், எம்.பி.எம். றிம்ஸான், எம்.என்.எம். அப்ராஸ், ஐ.எல்.எம். நாஸீம் ஆகியோருக்கு அவர்களின் ஊடகப்பணியை பாராட்டு கௌரவித்து விருதுகள் வழங்கப்பட்டது.


இந்நிகழ்வில் கொழும்பு பொலிஸ் தலைமையக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.ஏ.எம்.நவாஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் இலங்கை பொதுசேவை ஆணைக்குழுவின் உறுப்பினரும், சிரேஷ்ட நிர்வாகசேவை அதிகாரியுமான ஏ.எல்.எம். சலீம் கௌரவ அதிதியாக கலந்து கொண்டார். மேலும் கழக செயலாளர் ஏ.சி.எம். நிஸார் உட்பட பல முக்கியஸ்தர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.











No comments

note