Breaking News

அரச ஊழியர்களுக்கான இரண்டாம் மொழி சிங்கள பாடத்தின் திறன் வெளிப்படுத்தல் இறுதி நிகழ்வு

(சர்ஜுன் லாபீர்)

அரச ஊழியர்களுக்கான 150 மணித்தியாலம் கொண்ட இரண்டாம் மொழி சிங்கள பயிற்சி நெறியின் திறன் வெளிப்படுத்தல் இறுதி நிகழ்வு இன்று(12) கல்முனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பாடநெறியின் தலைவர் எம்.என்.எம் சசீர் தலைமையில் இடம்பெற்றது.


இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் கெளரவ அதிதியாக கல்முனை வலயக் கல்வி அலுவலக கணக்காளர் வை.ஹபிபுல்லா விசேட அதிதிகளாக பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் எம்.என்.எம் ரம்சான், தலைமைப்பீட சமூர்த்தி முகாமையாளர் ஏ.ஆர்.எம்

சாலீஹ்,பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் எஸ்.ஜனூபா,சிங்கள பாட வளவாளர்களான ஆர் சிரீஸ் கந்தராஜா,பி.சந்திரகுமாரி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.















No comments

note