Breaking News

சீன தேசிய மருந்தகத்தினால் இலங்கைக்கு ஆறு லட்சம் தடுப்பூசிகள் வழங்கிவைப்பு : புதனன்று இலங்கைக்கு வருகிறது.

சீன தேசிய மருந்தகத்தினால் உலகம் பூராகவும் உள்ள நாடுகளுக்கு நூறு மில்லியன் கோவிட் 19 தடுப்பூசிகள் கடந்த வெள்ளிக்கிழமை பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இலங்கைக்கான ஆறு லட்சம் தடுப்பூசிகள் கடந்த ஞாயிற்றுகிழமை சீன பிரதான விமான நிலையமான பீஜிங் விமான நிலைய அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்த ஆறு லட்சம் தடுப்பூசிகளும் எதிர்வரும் புதன்கிழமை (31) காலை பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை வந்தடையும் என எதிர்ப்பார்க்கபப்டுகிறது. 


இதன் மூலம் கோவிட் 19 தொற்றிலிருந்து பாதுகாப்பு பெற்ற இலங்கையர்களாக நாம் வாழ்வதற்கான சந்தர்ப்பம் கிட்டும் என நம்பப்படுகிறது.


நூருள் ஹுதா உமர்.



No comments

note