கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் உடல்களை அடக்கம் செய்வதற்கு புத்தளம் நகர சபை தயார் - புத்தளம் நகர சபையில் தீர்மானம்.
மார்ச் மாதத்திற்கான மாதந்த சபை கூட்டம் புத்தளம் நகர பிதா கே.ஏ பாயிஸ் அவர்களின் தலைமையில் நேற்று (4) இடம்பெற்றது.
இதன்போது, கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் உடல்களை தகனம் செய்வது அல்லது அடக்கம் செய்வது என்ற தீர்மானத்தை அரசாங்கம் எடுத்திருக்கின்ற நிலையில் அடக்கம் செய்வதற்கான இடத்தை தெரிவு செய்வதில் இழுபறி நிலை நிலவி வருகின்றது.
இதனை கருத்தில் கொண்டு கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் உடல்களை புத்தளம் நகர சபை எல்லைக்குள் அடக்கம் செய்வதற்கு விருப்பம் தெரிவித்து புத்தளம் நகர சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் உடல்களை நகர சபை மையவாடிகளில் அடக்கம் செய்வதற்கு புத்தளம் நகர சபை இணக்கம் தெரிவிக்கின்றது. அத்தோடு தேவை ஏற்படின் இப்பிரதேசத்தில் உரிய இடங்களில் அடக்கம் செய்வதற்கு ஏற்பாடுகளை செய்வதற்கும் நகர சபை தயாராக இருக்கின்றது.
மேலும் தேவை ஏற்படின் நகர பிதா தனது சொந்த நிலத்தை வழங்கவும் தயாராக இருப்பதாக சபையில் தெரிவித்தார்.
இதற்கு சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் உறுப்பினர்கள் அனைவரும் ஏகமனதாக ஆதரவு தெரிவித்தனர்.
MEDIA UNIT
No comments