Breaking News

ஹரீஸின் முயற்சியால் மாளிகைக்காடு மையவாடிக்கு தீர்வு.

நூருள் ஹுதா உமர். 

பலமாதங்களாக சிக்கலில் மாட்டி கொண்டு கடலரிப்பில் ஜனாஸாக்கள் வெளிவந்த மாளிகைக்காடு மையவாடி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வேலைத்திட்டம் இன்று ஆரம்பித்து  வைக்கப்பட்டது. 


பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸின் முயற்சியினால் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பணிப்புரைக்கு இணங்க கரையோரம் பேணல் திணைக்களம் முன்னெடுக்கும் இவ்வேலைத்திட்டத்தின் சகல பணிகளும் பூர்த்தி செய்யப்பட்டு நிர்மாண பணி இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. 


இந்நிகழ்வில் காரைதீவு பிரதேச செயலாளர் எஸ். ஜெகராஜன், காரைதீவு பிரதேச கரையோரம் பேனல் திணைக்கள அதிகாரி எஸ்.அஹமத் மஹ்ரூப், பிரதேச சபை உறுப்பினர் எம்.எச்.எம். இஸ்மாயில்

பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸின் பிரத்யோக செயலாளர் நௌபர் ஏ பாவா, மாளிகைக்காடு அந்நூர் ஜும்மா பள்ளிவாசல் தலைவர், செயலாளர், நிர்வாகிகள் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.






No comments

note