Breaking News

சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஆஷிக்கை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு

(சர்ஜுன் லாபீர்)

நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சகோதரர் எம். முஹம்மத் ஆஷிக் (SLAS)சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் உப பிரதேச செயலாளராக சிறப்பாக சேவையாற்றியமையை முன்னிட்டும், பிரதேச செயலாளராக பதவி உயர்வு பெற்று சாய்ந்தமருது பிரதேச செயலாளராக அவர் நியமனம் பெற்றதையிட்டும் கௌரவித்து வாழ்த்தும் முகமாக, நற்பிட்டிமுனை நண்பர்கள் வட்ட தலைவர் எம்.எம்

ரியாஸ்( BA) தலைமையில் ஏற்பாடு செய்திருந்த பாராட்டு விழா நடந்த(10)ம் திகதி நற்பிட்டிமுனை பிரின்ஸ் மண்டபத்தில் நடைபெற்றது.


இதன் போது, நற்பிட்டிமுனை ஹிக்மா ஜும்ஆ பள்ளிவாசல் சார்பாக அதன் தலைவர் ஐ.எல்.றஊப்தீன் பொன்னாடை போர்த்தி கௌரவித்ததோடு, நற்பிட்டிமுனை பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவர் அஷ்ஷெய்க் ஏ.எல். நாஸிர் கனியினால் (ஹாமி) நினைவுச் சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டது.






No comments

note