Breaking News

இஸ்லாமிய நாடுகளின் தலைவர்களுடன் ஜனாதிபதி, பிரதமர் பேச்சு..!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் இஸ்லாமிய நாடுகளின் தலைவர்களுடன் தொலைபேசி வாயிலாக கலந்துரையாடியுள்ளனர்.


இலங்கையுடனான தொடர்புகளை விரிவுப்படுத்துவது குறித்தும், இலங்கையில் வாழும் இஸ்லாமிய மக்களின் நிலை தொடர்பிலும் இலங்கை ஜனாதிபதியுடன் தாம் கலந்துரையாடியதாக இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் பொதுச்செயலாளர் கலாநிதி யூசுப் ஒதய்மீன் குறிப்பிட்டுள்ளார்.


இதன்போது இஸ்லாமியர்களின் ஜனாசாக்களை நல்லடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கியமை தொடர்பில் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு நன்றி தெரிவித்துள்ளது.


இதனிடையே, பிரதமர் மஹிந்த ராஜபக்ச பஹ்ரைன் இளவரசரான சல்மான் பின் ஹமாத் அல் கலீபாவுடன் நேற்று தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளார்.


இருதரப்பு உறவுகள் மற்றும் ஒத்துழைப்புக்களை விரிவுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக பிரதமர் வௌியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பஹ்ரைன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்பின் உறுப்பு நாடு என்பது குறிப்பிடத்தக்கது.


இதேவேளை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பிலான பிரேரணை மீதான வாக்கெடுப்புக்கு நாளை இடம்பெறவுள்ளது.


இலங்கை நேரப்படி நாளை பிற்பகல் 1.30 அளவில் வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.


இம்முறை மனித உரிமைகள் கூட்டத்தொடரின் போது இலங்கை தொடர்பில் பிராதான கருக்குழு தீர்மானம் ஒன்றை முன்வைக்கவுள்ளதாக ஏற்கனவே அறிவித்துள்ளது.


இந்நிலையில் அந்த பிரேரணை நாளை சபையில் சமர்பிக்கப்பட்டு வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.


பிரித்தானியா, கனடா, ஜேர்மன், வடக்கு மெசிடோனியா, மொன்டிநீக்ரோ மற்றும் மலாவி ஆகிய நாடுகள் இந்த குழுவில் அங்கம் வகிக்கின்றன.




No comments

note