ஐக்கிய சமாதான கூட்டமைப்பினரால் தையல் இயந்திரங்கள் வழங்கி வைப்பு !
நூருல் ஹுதா உமர்
கொழும்பு மாநகர சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் மாநகர சபை உறுப்பினர்களான முஹம்மட் முஸம்மில் மற்றும் கலீலுர்ரஹ்மான் ஆகியோர் தேவையுடைய மக்களை அடையாளம் கண்டு அவர்களுக்கான தையல் இயந்திரங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு கடந்த சனிக்கிழமை மருதானையில் நடைபெற்றது.
இந்நிகழ்வின் போது கருத்து தெரிவித்த ஐக்கிய சமாதான கூட்டமைப்பினர், ஒவ்வொரு மாநகர சபை உறுப்பினருக்கும் கொழும்பு மாநகர சபையினால் வழங்கப்பட்ட தலா 25 தையல் இயந்திரங்களை எவ்வித பாகுபாடுகளுமின்றி நியாயமான முறையில் தேவையுடையவர்களுக்கு எங்களினால் கையளிக்கப்படுவதாகவும், இந்த பகிர்ந்தளிப்பில் எவ்வித கட்சி, இன, மத பாகுபாடுகளும் இல்லாமல் எங்களுக்கு வாக்களிக்காத தேவையுடைய மக்களுக்கும் வழங்கி பகிர்ந்தளிப்பில் நீதியாக நடந்து கொண்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
No comments