Breaking News

சட்டத்தரணி தாஹா செய்னுதீனுக்கு ஜனாஸா தொழுகை

(அஸ்லம் எஸ்,மௌலானா)

காலம்சென்ற மூத்த சட்டத்தரணி எம்.யூ.தாஹா செய்னுதீன் அவர்களுக்கான ஜனாஸா தொழுகை மற்றும் துஆ பிரார்த்தனை நிகழ்வுகள் கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்நிகழ்வுகள் கல்முனைக்குடி முகையதீன் ஜும்ஆப் பள்ளிவாசலில் நாளை ஞாயிற்றுக்கிழமை (07) ளுஹர் தொழுகையை தொடர்ந்து இடம்பெறும் என கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி ஷாரிக் காரியப்பர் தெரிவித்தார்.

கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவரும் கிழக்கின் முதுபெரும் வழக்கறிஞருமான எம்.யூ.தாஹா செய்னுதீன் அவர்கள் நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பில் காலமானதுடன் அன்னாரது ஜனாஸா ஜாவத்தை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



No comments

note