Breaking News

ஐக்கிய மக்கள் சக்தியின் கல்முனைத்தொகுதிக்கான பிரதம காரியாலய திறப்பு விழா !

நூருல் ஹுதா உமர், எம்.என்.எம். அப்ராஸ்

ஐக்கிய மக்கள் சக்தியின் கல்முனைத்தொகுதிக்கான பிரதம காரியாலய திறப்பு விழா இன்று இரவு அம்பாறை கரையோர பிரதேச அமைப்பாளர் சட்டத்தரணி எம்.எஸ். அப்துல் றஸாக்கின் தலைமையில் கல்முனையில் நடைபெற்றது.


இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப், நல்லாட்ச்சிக்கான தேசிய முன்னணியின் தலைவர் பொறியலாளர் அப்துல் ரஹ்மான், ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் எம்.ஏ.ஹசன் அலி உட்பட ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.




No comments

note