கல்முனையில் கலைஞர் சுவதம் விருது வழங்கும் நிகழ்வு
(சர்ஜுன் லாபீர்,ராசிக் நபாயிஸ்,எம்.என்.எம் அப்ராஸ்)
அமைதியான ஒழுக்கமான,சிறந்த மனிதர்களைக் கொண்ட புனித தேசத்தை கட்டியெழுப்பும் உயரிய நோக்கின் அடிப்படையில் பயணிக்கும் கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தோடு இணைந்து கலை, கலாச்சார பாரம்பரியங்களை வளர்த்துப் பாதுகாப்பதற்காக கல்முனை பிரதேசத்தில் அர்ப்பாணிப்போடு பாடுபடும் பெறுமதிமிக்க கலைஞர்களை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு இன்று(24) கல்முனை பிரதேச செயலக கலாச்சார அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஹிபானவின் ஒருங்கிணைப்பில் கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம் நஸீர் தலைமையில் கல்முனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
அம்பாறை மாவட்ட செயலகம், கல்முனை பிரதேச செயலகம், கலாச்சார அதிகார சபை ஆகியன இணைந்து நடத்திய இந் நிகழ்வில் கல்முனை பிரதேசத்தில் பல்துறைகளில் தெரிவு செய்யபட்ட 10 கலைஞர்களுக்கான பாராட்டும், கெளரவிப்பும் நடைபெற்றது.
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரும்,மாவட்ட சமூர்த்தி பணிப்பாளருமான வி.ஜெகதீசன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
மேலும் இந் நிகழ்வுக்கு கெளரவ அதிதிகளாக பிரதேச செயலக கணக்காளர் வை.ஹபிபுல்லா, மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் ரி.எம் ரின்ஸான்,தலைமைப்பீட சமூர்த்தி முகாமையாளர் ஏ.ஆர் சாலீஹ்,உதவி சமூர்த்தி முகாமையாளர் எஸ்.எல்.ஏ அஸீஸ் உட்பட கலைஞர்கள் பலர் கொண்டு சிறப்பித்தனர்.
No comments