Breaking News

முஸ்லீம் சமூகத்திற்கு உடல்களை புதைப்பதற்கு உள்ள உரிமையை இலங்கை மதிக்கவேண்டும்- ஜெனீவாவில் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு தெறிவிப்பு...

முஸ்லீம்களின் உடல்களை தகனம் செய்யும் உரிமையை மதிப்பதற்கும் உத்தரவாதம் செய்வதற்குமான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் உடனடியாக எடுக்க வேண்டும் எனvஇஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் செயலாளர் நாயகம் Yousef Al Othaimeen  தெரிவித்துள்ளார்.


ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 46 அமர்வின் உயர்மட்ட கூட்டமொன்றில் உரையாற்றுகையில் அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.


இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பில் இடம்பெறாத நாடுகளில் முஸ்லீம் மக்களின் நிலைமையை அவதானிப்பதில் ஆர்வமாகவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த அடிப்படையில் இஸ்லாமிய விதிமுறைகளை பின்பற்றி கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு இலங்கையில் முஸ்லீம்களிற்கு அனுமதி மறுக்கப்படுவதால் இலங்கையில் முஸ்லீம்களின் நிலைமை குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.




No comments

note