பாத்திமா ஷைரீன் இனாம் மௌலானா ஒரு வளர்ந்து வரும் ஆளுமை : ஆரிப் சம்சுதீன் புகழாரம் !
நூருல் ஹுதா உமர்.
கல்முனை மஹ்மூத் மகளிர் உயர்நிலை பாடசாலையில் உயர்தரக் கல்வியை கற்றுக் கொண்டிருக்கும் போதே சர்வதேச விஞ்ஞான தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் ஆய்வு நிறுவனத்தின் அனுசரணையுடன் நடத்தப்பட்ட நிலத்துக்கடியில் கட்டிடங்களுக்கடியில் புவி வெப்பமடைதல் என்னும் தலைப்பில் உலகின் 25 நாடுகள் பங்குபற்றிய போட்டியில் இலங்கை சார்பாக பாத்திமா ஷைரீன் இனாம் மௌலானா என்ற உயர்தர வகுப்பு மாணவிக்கு தனது திறமையின் அடிப்படையில் அப்போட்டியில் பங்கு பற்ற சந்தர்ப்பம் கிடைத்தது. அம்மாணவி மேற்குறிப்பிடப்பட்டுள்ள போட்டி இந்தோனேசியாவின் ஜாவா பல்கலைக்கழகத்தில் 24 நாடுகளின் அறிவுத் திறன் கொண்ட மாணவ மாணவிகளோடு மிகுந்த போட்டிகளுக்கு மத்தியில் தான் பாத்திமா ஷைரீன் இனாம் மௌலானா சிறப்பிடத்தை பெற்றுக்கொண்டார் என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய இளைஞர் அமைப்பாளருமான சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் புகழாரம் சூட்டியுள்ளார்.
அவரது வீட்டுக்கு நேரடியாக சென்று வாழ்த்து தெரிவித்த அவர், மேலும் கருத்து தெரிவிக்கும் போது
அவரின் பாடசாலை வாழ்க்கையின் சாதனைகளை சொல்லப்போனால் 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் ஐந்து புலமைப் பரிசில் பரிட்சையில் பாடசாலையிலேயே அதி கூடிய புள்ளிகளைப் பெற்றார். மாத்திரமல்லாது கடந்த 2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் 9A பெறுபேறுகளைப் பெற்று முதல்தர மாணவியாக தோன்றி உயிரியல் விஞ்ஞான பிரிவின் கற்றலுக்கு தெரிவானார்.
மாத்திரமல்லாது தமிழ் தினப் போட்டிகள் மற்றும் தேசிய மட்டத்தில் நடந்த ஆங்கில மொழி மூலமான போட்டிகளில் முதலிடங்களை தட்டிச்சென்றார். மேலும், ஆங்கில கணித வினா போட்டி , ஆங்கில விஞ்ஞான வினா விடை போட்டியில் முதலிடம் மற்றும் ஆங்கில நாடக போட்டியில் அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார் , அத்தோடு கடந்த வருடம் தேசிய ரீதியில் முஸ்லிம் சமய கலாசார பண்பாட்டலுவல்கள் அமைச்சினால் நடாத்தப்பட்ட தேசிய மீலாது விழாவின் பேச்சுப் போட்டியில் அகில இலங்கை ரீதியில் முதல் இடத்தைப் பெற்றுக் கொண்டார் என்பதோடு இன்னும் எத்தனையோ சாதனைகளுக்கு சொந்தக்காரியான இம்மாணவி இந்த நாட்டின் சொத்து. அன்பு மகள் பாத்திமா ஷைரீனுக்கும் அவரது பெற்றோருக்கும் தன்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
No comments