கல்முனை தாறுஸ்ஸபா அமையத்தின் ஏற்பாட்டில் குர்ஆன் பிரதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு.
நூருள் ஹுதா உமர்.
கல்முனை தாறுஸ்ஸபா சமூக அபிவிருத்தி அமையத்தின் ஏற்பாட்டில் குர்ஆன் மத்ரஸா மாணவர்களுக்கான தஜ்வீத் குர்ஆன் வழங்கி வைக்கும் நிகழ்வு தாறுஸ்ஸபா அமையத்தின் தவிசாளர் அல் - உஸ்தாத் மௌலவி சபா முஹம்மத் (நஜாஹி) முகத்தமுல் காதிரி அன்னவர்களின் தலைமையில் சுதந்திர தினத்தன்று கல்முனை தாறுஸ்ஸபா மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக இலங்கை சமாதான கற்கை நிலையத்தின் பணிப்பாளரும், கிழக்கு பல்கலைக்கழக பேரவை உறுப்பினருமான பேராசிரியர் முனைவர் எஸ்.எல். றியாஸ், பேராதனை பல்கலைக்கழகத்தின் மெய்யியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் முபிஸால் அபூபக்கர், எழுத்தாளர் ஏ.ஜே. எம்.சமீம், உட்பட தாறுஸ்ஸபா அமைய முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
கல்முனை தாறுஸ்ஸபா சமூக அபிவிருத்தி அமையம் கடந்த பல வருடங்களாக இவ்வாறான பல்வேறு சமூகம் சார் நிகழ்வுகளை ஏற்பாடு செய்து நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
No comments