Breaking News

இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியில் சுதந்திர தின நிகழ்வும் மரம் நடுகையும்.

இலங்கை சனநாயக சோஷலிச  குடியரசின் 73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றி தேசிய கீதம் இசைத்து கொண்டாடப்பட்டு  வருகின்றன. 

அந்த வகையில் கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியில் கல்லூரியின் அதிபர் எம்.எச்.எம் .தௌபீக் தலைமையில் இன்று (05) கல்லூரி வளாகத்தில் நிகழ்வுகள்  நடைபெற்றன.


இதன்போது அதிபரினால் தேசிய கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் பாடப்பட்டு மரியாதை செய்யும் நிகழ்வு இடம்பெற்றதோடு
கல்லூரி வளாகத்தில் சுமார் நூறு மரக் கன்றுகளை நாட்டி வைத்தனர். 

இந்நிகழ்வில் கல்லூரியின் பிரதி அதிபர் டீ.எம்.பாரி, மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர்.


K.M.C.C. MEDIA UNIT









No comments

note