Breaking News

பல சமாதான புறாக்கள் விடப்பட்டு மருதமுனை பறக்கத் டெக்ஸ் நிறுவனத்தில் இலங்கையின் 73வது சுதந்திர தின நிகழ்வு

(றாசிக் நபாயிஸ், பி.எம்.எம்.ஏ.காதர், ஏ.எல்.எம்.சினாஸ்)

இலங்கையின் 73வது சுதந்திர தினத்தையொட்டி மருதமுனை பறக்கத் டெக்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்த சுதந்திர தின நிகழ்வு இன்று (04-02-2021) காலை 9.30மணியளவில் மருதமுனை பிரதான வீதியில் அமைந்துள்ள நிறுவனத்தின் முன்பாக நடைபெற்றது.

சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி
நிறுவனத்தின் 
நிருவாகப் பணிப்பாளர் எம்.ஏ.ஜமால் முகம்மது தலைமையில்  நடைபெற்ற இந்நிகழ்வில் பல சமாதான புறாக்கள் விடப்பட்டதுடன் இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பறக்கத் டெக்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் எம்.ஐ.ஏ.பரீட் கலந்து சிறப்பித்தார்.

இந்த நிகழ்வில் பிரதம பேச்சாளராக தென்கிழக்குப் பல்கலைக்கழக அரசியல், விஞ்ஞானத்துறைத் தலைவர் கலாநிதி எம்.எம்.பாஸில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். நிகழ்வில் வர்த்தகர்களும், நிறுவன ஊழியர்களும் மற்றும் ஊடகவியலாளர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.





No comments

note