Breaking News

இலங்கையின் 73வது சுதந்திர தின விழா கல்முனை பிரதேச செயலகத்தினால் விமரிசையாக கொண்டாடப்பட்டது

(சர்ஜுன் லாபீர், றாசிக் நபாயிஸ்)

இலங்கை சனநாயக சோஷலிச குடியரசின்
73வது சுதந்திர தின விழா கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம் நஸீர் தலைமையில் இன்று(4) நடைபெற்றது. 

இந் நிகழ்வில் ஜனாதிபதியின் விசேட பணிப்புரையின் கீழ் மர நடுகை நிகழ்வு இடம்பெற்றதுடன் சமாதான புறாவும் விடப்பட்டது.

மேலும் எமது நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த படைவீரர்கள் மற்றும் ஏனையவர்காளுக்காக 2 நிமிட மெளன பிராத்தனையும் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பிரதேச செயலக கணக்காளர்வை.ஹபிபுல்லாஹ், உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர்,கணக்காளர் வை.ஹபிபுல்லா,நிர்வாக உத்தியோகத்தர் எம்.என்.எம் ரம்சான் சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர் சாலீஹ்,மேலதிக மாவட்ட பதிவாளர் எம்.டி.எம் கலீல்,கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எம் முஹ்கரப், நிர்வாக கிராம சேவை.உத்தியோகத்தர் யூ.எல் பதுருத்தீன்,பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்,பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்(காணிப்பிரிவு) யூ.எல் ரமீஸ்,நிதி உதவியாளர் எம்.ஐ.ஏ ரகுமான் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் யூ.எல்.ரமீஸ், எம்.ஹசன், உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.













No comments

note