விமானப்படை வீரர்களை ஆசிரியர்களாக இணைக்க தீர்மானம் இல்லை
விமானப்படை வீரர்கள் பாடசாலை ஆசிரியர்களாக இணைத்துக்கொள்வதற்கு எந்தவித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என்று கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் நேற்று (06) தெரிவித்தார்.
விமானப்படை வீரர்கள் பின்தங்கிய பிரதேச பாடசாலைகளில் ஆசிரியர்களாக இணைத்துகொள்ளப்பட்டிருப்பதாக ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ள கூற்று தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் றோகினி கவிரத்ன நேற்று பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பான விடயங்களை கண்டறிவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
(அரசாங்க தகவல் திணைக்களம்)
No comments